india

img

பெகாசஸை அரசுகள் தவறாக பயன்படுத்த வாய்ப்பு.. 3 வாரங்களுக்கு முன்பு திடீர் எச்சரிக்கை செய்த என்எஸ்ஒ குழுமம்...

புதுதில்லி:
‘பெகாசஸ் ஸ்பைவேர்’ வேவு மென்பொருளை, அரசாங்கங்கள் தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளதாக-இந்த மென்பொருளை தயாரித்து விற்கும் இஸ்ரேலின் என்எஸ்ஓ குழுமம், 3 வாரங்களுக்கு முன்னதாக திடீர்எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டிருப் பது தெரியவந்துள்ளது.

என்எஸ்ஓ நிறுவனம், ஜூன் 30அன்று தயாரித்து வெளியிட்ட ‘வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பு அறிக்கை- 2021’ (‘Transparency andResponsibility Report 2021’) என்ற தனது கொள்கை ஆவணத்தில், 40 நாடுகளில் என்எஸ்ஓ குழுமத்திற்குஅரசாங்கம் மற்றும் அரசாங்க ஏஜென்சி கள் என 60 வாடிக்கையாளர்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது.அந்த 40 நாடுகளில் 51 சதவிகிதம் உளவுத்துறை முகமைகளாலும்,38 சதவிகிதம் அமலாக்கத்துறைகளாலும், 11 சதவிகிதம் ராணுவத்தினராலும் தங்களின் வேவு மென்பொருள் பயன்படுத்தப்படுவதாக கூறியுள்ளஎன்எஸ்ஓ குழுமம், அரசியல் தலைவர்கள், என்.ஜி.ஓக்கள், ஊடகவியலாளர்கள், வழக்கறிஞர்கள் என பலருக்குஎதிராக என்.எஸ்.ஓ.வின் ‘பெகாசஸ்ஸ்பைவேர்’ தவறாக பயன்படுத்தப் பட்டு இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது; இது மனித உரிமைகளுக்கு எதிரான அபாயமாக மாறலாம் என்று தெரிவித்துள்ளது.

அதாவது, அரசாங்கங்கள், தேசியப் பாதுகாப்பு அல்லது சட்ட அமலாக்கத்துடன் தொடர்பில்லாத காரணங்களிலும், தனிநபர்களை கைதுசெய்தல், தடுப்புக் காவலில் வைத் தல் போன்ற முறைகேடுகளுக்கு பெகாசஸ் ஸ்பைவேர் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தலாம். இதன் மூலம் சட்ட மற்றும் நீதித்துறை செயல்முறைகளுடன் தொடர்புடைய உரிமைகளும் பறிக்கப்படலாம். சுதந்திரமாக சிந்தித்தல், மனசாட்சி, மதம், சுதந்திரமாக இயங்குதல் மற்றும் சாதாரண குடிமை வாழ்வில் பங்கேற்றல் போன்றவற்றிலும் அரசாங்கங்கள் தலையிடலாம் என்று கூறியுள்ளது.

மே 2020 முதல் ஏப்ரல் 2021 வரையிலான காலகட்டத்தில், ஸ்பைவேர் தவறாக பயன்படுத்தப்பட்டது தொடர்பாக12 புகார்களை விசாரித்ததாக கூறியுள்ள இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனம், பெகாசஸ் தனக்கு வந்த புதியவிற்பனை வாய்ப்புகளில் கிட்டத்தட்ட 15 சதவிகித வாய்ப்புகளை, மனித உரிமை மீறல்கள் தொடர்பான கவலை காரணமாக நிராகரித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளது. பெகாசஸ் ஸ்பைவேர் மென்பொருளைக் கேட்டுவந்த 15 சதவிகிதம் பேருக்கு அதனை விற்க மறுத்து விட்டதாக கூறியுள்ளது.இந்த வகையில், 2016-ஆம் ஆண்டுமுதல் சுமார் 300 மில்லியன் டாலர்கள்மதிப்பிலான வாய்ப்புகளை மறு ஆய் வுக்கு உட்படுத்தி, பின்னர் அவற்றை நிராகரித்துள்ளதாக கூறியுள்ள என்எஸ்ஓ, இதில் 100 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஐந்து வாடிக்கையாளர்களும் அடங்குவர் என்று குறிப்பிட்டுள்ளது. 

அனைத்து வாடிக்கையாளர் ஒப்பந்தங்களிலும் குறைந்தபட்ச மனித உரிமைகள் இணக்க விதிமுறைகள், அர்ப்பணிப்புடன், நியாயமான மற்றும் சட்டப்பூர்வமான தடுப்பு மற்றும் கடுமையான குற்றங்கள் மற்றும்பயங்கரவாதத்திற்கு எதிரான விசாரணைக்கு மட்டுமே தங்களின் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்று கோருவதாகவும் என்.எஸ்.ஓ. கூறியுள்ளது.தவறான பயன்பாடு தொடர்பானகுற்றச்சாட்டுக்கள் 0.5 சதவிகிதத்திற் கும் குறைவுதான் என்றாலும், மனிதஉரிமைகள், ஊழல் மற்றும் ஒழுங்குமுறை கட்டுப்பாடுகள் போன்ற காரணங்களுக்காக 55 நாடுகளை முன்கூட்டியே தடைசெய்ததாகவும் என்எஸ்ஓ குழுமம் தெரிவித்துள்ளது. 

;