india

img

கருப்பு பூஞ்சை தொற்றுக்கு இலவச சிகிச்சை அளித்திடுக... பிரதமருக்கு சோனியா வலியுறுத்தல்...

புதுதில்லி:
கருப்பு பூஞ்சை தொற்றுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும்என்று பிரதமர் மோடிக்கு கடிதம்மூம் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்புஅதிகரித்துவரும் நிலையில் கருப்புபூஞ்சை தொற்று நோயும் பரவி வருகிறது. இந்த தொற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை அதிகமாக தாக்குவதாக தெரிவிக்கப்படுகிறது.  இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.கருப்பு பூஞ்சை தொற்று காரணமாக பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் கருப்பு பூஞ்சை நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஆம்போடெரிசின் பி மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 
இந்நிலையில் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ்  தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “கருப்பு பூஞ்சை தொற்றுக்கு இலவச சிகிச்சை அளிக்கவேண்டும். லிபோசோமால் ஆம்போடெரிசின்-பி மருந்து கருப்பு பூஞ்சை தொற்று சிகிச்சைக்கு முற்றிலும் அவசியம் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். இருப்பினும் சந்தையில்அதற்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். கருப்பு பூஞ்சை தொற்றுக்கு ஆயுஷ் மான் பாரத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

;