india

img

இலவச தடுப்பூசிக்கு ஜிடிபி-யில் 1% கூட செலவாகாது.... இந்தியா ரேட்டிங் ஆய்வு நிறுவனம் தகவல்....

புதுதில்லி:
இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் (ஜிடிபி) 1 சதவிகிதத்திற்கும் குறைவாகவே செலவாகும் என ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.இந்தியாவில் தற்போது 45 வயதுக்குமேற்பட்டோருக்கு அரசு மையங்களில் இலவச மாகத் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. மேலும், மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அரசு அனுமதித்துள்ளது. இருப்பினும், கோவிஷீல்ட் தடுப்பூசியை தயாரித்து வழங்கும் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் மத்திய அரசுக்கு குறைவான விலைக்கும்,மாநில அரசுகளுக்கு கூடுதல் விலைக்கும் தடுப்பூசிகளை விற்பனை செய்வது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் நாட்டிலுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட 84 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த ரூ. 67 ஆயிரத்து 19 கோடி மட்டுமே செலவாகும் என ‘இந்திய ரேட்டிங் நிறுவனம்’ தெரிவித்துள்ளது.  அதாவது, மத்திய அரசு ரூ. 20 ஆயிரம் செலவிட வேண்டியிருக்கும். அனைத்து மாநில அரசுகளும் சேர்ந்து ரூ. 46 ஆயிரம் கோடிசெலவிட வேண்டியிருக்கும் என்றுகூறியுள்ளது.இந்தத் தொகை பார்க்கப் பெரிதாகத் தோன்றினாலும் இது நாட்டின் ஒட்டுமொத்த ஜிடிபி-யில்வெறும் 0.36 சதவிகிதம்  மட்டுமே என இந்திய ரேட்டிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் பட்ஜெட்டைப் பொறுத்தவரையிலும், இது ஒட்டுமொத்த ஜிடிபி-யில் 0.12 சதவிகிதமாகவும், மாநில அரசின் பட்ஜெட்டில் இது ஒட்டுமொத்த ஜிடிபி-யில் 0.264 சதவிகிதமாகவும் இருக்கும் என ‘இந்தியா ரேட்டிங்’ குறிப்பிட்டுள்ளது.அதிகபட்சமாகப் பீகார் தனது மொத்த மாநிலஜிடிபி-இல் 0.60 சதவிகிதத்தையும், உத்தரப்பிரதேசம் 0.47 சதவிகிதத்தையும், ஜார்க்கண்ட்0.37 சதவிகிதத்தையும் செலவிட வேண்டி யிருக்கும். ஒட்டுமொத்தமாக இந்தியா இப்போதுஎதிர்கொள்ளும் உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார பிரச்சனையுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவு என்றும் இந்தியா ரேட்டிங் தெரிவித்துள்ளது.

;