india

img

6 ஆண்டாக மோடி அரசு உண்மை எனக் கூறும் அனைத்தும் பொய்தான்.... நம்பி நம்பியே மக்கள் ஏமாந்து விட்டார்கள்

புதுதில்லி:
நாடாளுமன்ற மாநிலங்களவையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் பங்கேற்று உரையாற்றியுள்ளார்.

அந்த உரையில் அவர் கூறியிருப்பதாவது:

“விவசாயிகள் தங்கள் உரிமைக்காகப் போராடி வருகின்றனர். ஆனால், அவர்கள் தேசவிரோதிகள், காலிஸ்தானிகள் என்று பட்டம் சூட்டப்படுகிறார்கள். முகலாயர்களை எதிர்த்துப் போரிட்டபஞ்சாப் விவசாயப் போர் வீரர்களுக்கு, மோடி அரசு இன்று தேசவிரோதிப் பட்டம் கட்டுகிறது.வேளாண் அமைச்சர் பேசியபேச்சைக் கேட்டேன். ‘உண்மையைக் கேளுங்கள்’ என மீண்டும் மீண்டும் அவர் கூறுகிறார். கடந்த6 ஆண்டுகளாக நீங்கள் (மத்திய அரசு) உண்மை என்ற பெயரில் கூறும் பொய்களைத்தானே நாங்கள் கேட்டு வருகிறோம்.நாட்டின் இன்றைய சூழலில், யாரேனும் உண்மையைப் பேசினால், அவர்கள் தேசவிரோதிகளாகவும், துரோகிகளாகவும் பட்டம் சூட்டப்படுவார்கள் என்றாகிவிட்டது. குடும்பப் பிரச்சனைக் குக் கூட தேசவிரோத வழக்குப் பதிவு செய்யப்படுகிறது.

குடியரசு தினத்தில் 200 விவசாயிகள் மீது தேசதுரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். அன் றைய தினம் தேசியக் கொடிக்கு நேர்ந்த அவமானத்துக்கு நடிகர் தீப் சித்துதான் பொறுப்பு. ஆனால், இதுவரை அவர் கைதுசெய்யப்படவில்லை?பாலகோட் தாக்குதல்குறித்து ஒரு பத்திரிகையாளரும், நடிகையும் பேசியது அம்பலமானது. ரகசிய காப்புச் சட்டத்தைமீறிய அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்றுதெரியவில்லை.மாறாக, தில்லியில் விவசாயிகள் போராடும் இடத்தில் சுவர் எழுப்புகிறீர்கள். அதற்குப் பதில்சீன எல்லையில் சுவர் எழுப்பியிருந்தால், ஊடுருவலுக்கு தைரியம் இருந்திருக்காது.இவ்வாறு சஞ்சய் ராவத் பேசியுள்ளார்.

;