india

img

தில்லி சங்பரிவார் வன்முறையில் பாதிக்கப்பட்ட 1,126 குடும்பங்களுக்கு சிபிஎம் நேரடி உதவி.... உறவுகளை பறிகொடுத்த 54 குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய்....

புதுதில்லி:
வடகிழக்கு தில்லியில் சங்பரிவார்நடத்திய வன்முறையில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு சிபிஎம் வழங்கிய நிவாரண உதவிகளையும் மறுவாழ்வு முயற்சிகளையும் இழிவுபடுத்தும் முயற்சியில் சில ஊடகங்கள் களமிறங்கியுள்ளன.

கத்துவா சிறுமி பாலியல் வன்கொலை யின் பெயரில் கேரளத்தில் நடந்த நிதி மோசடியில் யூத் லீக் சிக்கியுள்ளது. இதைதிசைதிருப்பும் வகையில் இந்த பொய் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாத்யமம் என்கிற நாளிதழ் வெளியிட்ட செய்தியை அடிப்படையாக கொண்டு மீடியா ஒன் சேனலும் தவறான செய்திகளை எடுத்துக் கொண்டது.தில்லியில் சமூக வேறுபாடு இல்லாமல் கலவரத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் உதவிகளை சிபிஎம் வழங்கியது. கலவரம்தணிந்த சிறிது நேரத்திலேயே மார்ச் 1ஆம் தேதி தொடங்கிய நிவாரணப் பணிகள் இன்னமும் முடிவடையவில்லை. முதல் கட்டத்தில் உணவு, பாத்திரங்கள், ஆடை, மருந்து மற்றும் சட்ட உதவி வழங்கப்பட்டன. 1,126 குடும்பங்களைச் சேர்ந்த 6,130 பேருக்கு நேரடி உதவிகள் வழங்கப் பட்டன. வீட்டுக்கு வீடு அளித்த உதவி மக்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்கியது. நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு எரிவாயு சிலிண்டர்களும் அடுப்புகளும் வழங்கப்பட்டன. அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைமையில் சட்ட உதவி குழு அமைக்கப்பட்டுள்ளது.

கலவரத்தில் கொல்லப்பட்ட 54 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது. காயமடைந்த வர்களுக்கு ரூ.5,000 முதல் ரூ.20,000 வரை உதவி வழங்கப்பட்டது. கோவிட்  ஊரடங்கிலும் நிவாரண முயற்சிகள் தொடர்ந்தன. 2,100 பேருக்கு தவறாமல் உணவளிக்கப்பட்டது. 50 பேருக்கு வியாபாரம் செய்ய சக்கர வண்டிகளும், பெண்களுக்கு தையல் இயந்திரங்களும்வழங்கப்பட்டன. கடைகளைத் தொடங்கி நடத்த உதவி அளிக்கப்பட்டது.  52 குழந்தைகளுக்கு கல்வி உதவியாக மூன்று மாதத்துக்கு ஒருமுறை ரூ.2000 மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட்டன. குழந்தைகளுக்கு உதவ ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். பெண்கள் உட்பட இளைஞர்களின் தொழில் திறன் மேம்பாட்டுக்கான மையத்தை நிறுவுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

;