india

img

கே.கே.ராகேஷ் எம்.பி.க்கு கோவிட்.... மெதாண்டா மருத்துவமனையில் அனுமதி....

புதுதில்லி:
தில்லியில் உழவர் போராட்டத் திற்கு தலைமை தாங்கும் விவசாயிகள் சங்கத் தலைவரும், சிபிஎம் மாநிலங்களவை உறுப்பினருமான கே.கே.ராகேஷ்க்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு கோவிட் நேர்மறை ஆனபிறகு தில்லியில் உள்ள மெதாண்டாமருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். ராகேஷ் கடந்த இரண்டு மாதங்களாக விவசாயிகளின் போராட்டத்தில் பங்கேற்று வருகிறார்.

ராகேஷின் முகநூல் பதிவு
மெதாண்டா மருத்துவமனையில் கோவிட்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளேன். கடந்த இரண்டுமாதங்களாக விவசாயிகளின் போராட்டத்துடன் கலந்து கொண் டேன். பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட பொதுக் கூட்டங் கள், பேரணிகளிலும் பங்கேற்றேன். ஒருவார இடைவெளியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. குடியரசு தின உழவர் அணிவகுப்பில் பங் கேற்ற பின்னர் நடந்த சோதனை முடிவும் எதிர்மறையாக இருந்தது.காசிப்பூர் எல்லையில்  அண்மையில் ஆர்எஸ்எஸ் மற்றும் காவல்துறையினர் இணைந்து போராட்டத்தை சீர்குலைக்க முயன்றபோது அதை வலுவாக தடுத்து நிறுத்தியோருடன் இருந்தேன். நாடாளுமன்றத்தின் 27 ஆவது அமர்வுக்கு முன்னதாக சோதனை செய்யப்பட்டபோது இதுஎதிர்மறையாக இருந்தது. இதைத்தொடர்ந்து 29 ஆம் தேதி நாடாளுமன்றம் புறக்கணிப்பு மற்றும் எதிர்ப்புஊர்வலத்தில் பங்கேற்றேன். கடுமையான காய்ச்சல் மற்றும் கோவிட் அறிகுறிகளைக் காட்டிய பின்னர் 30 ஆம்தேதி (சனியன்று) மீண்டும் பரிசோதனை நடத்தப்பட்டது. ஞாயிறன்று காலை அதன் முடிவு வந்தபோது கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது.

மெதாண்டா மருத்துவமனையில் ஓய்வெடுக்க மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். தகவல் அறிந்து பலரும் தொடர்பு கொள்கிறார்கள். இதைநீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

;