india

img

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு தீவிரம்.... இன்று மத்தியப் பல்கலை. துணைவேந்தர்களிடம் ஆலோசனை....

புதுதில்லி:
புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், மத்தியக் கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், அனைத்து மத்தியப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களிடம் செவ்வாயன்று (மே 18)காணொலி மூலம் ஆலோசனைநடத்துகிறார்.

இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு வடிவமைத்த ‘தேசிய கல்விக் கொள்கை-2020’க்குமத்திய அரசு கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது. கொரோனா பரவல் சூழல் கருதி 2021 ஆம் ஆண்டுக்குள் கல்விக்கொள்கையை அமல்படுத்த மத்திய அரசுஅறிவுறுத்தியுள்ளது. அதன்படி நாடு முழுவதும் கல்விக் கொள்கையின் சாராம் சங்கள் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில் புதிய கல்விக் கொள்கையைப் பள்ளி, கல்லூரிகளில் அமல்படுத்து வது குறித்து மாநிலக் கல்வித்துறைச் செயலர்கள், பல்கலைக்கழகங்களுடன் ஆலோசனை நடத்த மத்திய அரசு முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து மத்தியக் கல்வித் துறைஅமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் மாநிலக் கல்வித்துறைச் செயலர்களு டனான ஆலோசனைக் கூட்டம், காணொலிக் காட்சி வழியாக திங்களன்று நடைபெற்றது. 

கூட்டத்தில் மாநிலக் கல்வி அமைச்சர் பங்கேற்க அனுமதி வேண்டும் என்று தமிழகஅரசு கடிதம் எழுதியிருந்தது. இதற்கு மத்தியஅரசு பதிலளிக்காத நிலையில், ஆலோசனைக் கூட்டத்தை தமிழக அரசுபுறக்கணித்தது.இந்நிலையில் செவ்வாயன்று மத்தியக்கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், அனைத்து மத்தியப் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களிடம் காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.இதில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துதல், இணையவழிக் கற்பித்தல் மேம்பாடு, கொரோனா பரவல் கல்வித்துறையில் ஏற்படுத்திய பாதிப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்துக் கலந்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை க்குத் தற்போதைய திமுக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

;