india

img

பங்குச்சந்தை முறைகேடு வழக்கு தொடர்பாக பல்வேறு இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை!

பங்குச்சந்தை முறைகேடு வழக்கு தொடர்பாக இடைத்தரகர்கள் மற்றும் வர்த்தகர்கள் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடியாக சோதனை நடத்தினர்.  

தேசிய பங்குச்சந்தையின்(என்எஸ்இ) நிர்வாக இயக்குனராக கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை சித்ரா ராமகிருஷ்ணா பணியாற்றி வந்தார். அப்போது இவர், இமயமலையில் இருக்கும் சாமியார் ஒருவரிடம் கலந்தாலோசித்து பங்குச்சந்தை தொடர்பான முக்கிய முடிவுகளை எடுத்ததாகவும், ரகசிய தகவல்களை அவருக்குப் பகிர்ந்ததாகவும் இந்திய பங்குச்சந்தைகளின் ஒழுங்காற்று அமைப்பான செபி தெரிவித்துள்ளது.      

மேலும் அந்த சாமியாரின் பரிந்துரையின் பேரில் சித்ரா ராமகிருஷ்ணா பங்குச்சந்தை விதிமுறைகளை மீறி, ஆனந்த் சுப்ரமணியன் என்பவரை தனது ஆலோசகராகவும், குழு செயல்பாடு கண்காணிப்பு அதிகாரியாகவும் ரூ.1.68 கோடி சம்பளத்தில் நியமித்ததாகவும் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.    

இதுதொடர்பாக செபி நடத்திய விசாரணையில், சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ரூ.3 கோடியும் ஆனந்த் சுப்பிரமணியன், தேசிய பங்குச்சந்தையின் இன்னொரு முன்னாள் தலைவர் ரவி நாராயண் ஆகியோருக்கு தலா ரூ.2 கோடி அபராதமும், தேசிய பங்குச்சந்தை தலைமை குறைதீர்ப்பு  அதிகாரி வி.ஆர்.நரசிம்மனுக்கு ரூ.6 லட்சம் அபராதமும் செபி விதிக்கப்பட்டது.      

இந்த வழக்கில் தேசிய பங்குச் சந்தை முறைகேடு தொடர்பாக ஆனந்த் சுப்பிரமணியனை சிபிஐ அதிகாரிகள் பிப்.24 ஆம் தேதி சென்னையில் வைத்து கைது செய்தனர். இதையடுத்து சித்ரா ராமகிருஷ்ணாவை மார்ச் 3 ஆம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  

இந்நிலையில், பங்குச்சந்தை முறைகேடு வழக்கு தொடர்பாக மும்பை, தில்லி, குஜராத், காந்திநகர், நொய்டா, கொல்கத்தா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில், சம்பந்தப்பட்ட சில பங்குச்சந்தை இடைத்தரகர்கள் மற்றும் வர்த்தகர்கள் தொடர்புடைய வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

;