india

img

வேளாண் சட்டங்கள் ரத்தான பின்தான் எங்களுக்கு புத்தாண்டு..... விவசாயிகள் அறிவிப்பு...

புதுதில்லி:
“வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்ட பின்னர்தான் புதிய ஆண்டு தொடங்கும், இந்தக் கணத்தில் இதனைக் கொண்டாடுவதற்கு எதுவும் இல்லை” என்று போராடும் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

விவசாயிகளுக்கு விரோதமாக மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, கடுங்குளிரில், தில்லியின் சிங்கு எல்லையில் பல்வேறு மாநில விவசாயிகள் போராடிக் கொண்டி ருக்கிறார்கள். குர்தாஸ்பூரைச் சேர்ந்த 25 வயது இளைஞரான ஜெய்பால் சிங், செய்தியாளர்களிடம் கூறும்போது, மத்திய அரசாங்கம் விவசாயிகளின் அடிப்படைக் கோரிக்கையான வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக ஒப்புக்கொண்டால்தான் எனக்குப் புத்தாண்டு பிறக்கும் என்றார்.எங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறினால்தான் எங்களுக்குப் புத்தாண்டு தொடங்கும். இந்தச் சட்டங்களை அரசாங்கம் ரத்து செய்தால்தான் எங்களால் புத்தாண்டை முறையாகக் கொண்டாட முடியும். குறைந்தபட்ச ஆதார விலைதொடர்பாக ஒரு சட்டரீதியான உத்தரவாதம் அளிக்கப்படுவது மிகவும் முக்கியமான ஒன்றாகும் என்று இளம்அறிவியல் (வேளாண்) பட்டதாரி யான ஜெய்பால் சிங் கூறினார். இதேபோன்றே விவசாயப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அனைவருமே, “புத்தாண்டைக் கொண்டாடுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது,” என்று வினவினார்கள்.

“பொதுவாக நாங்கள் புத்தாண்டுதுவங்குவதற்கு முந்தைய நாள் மாலையிலிருந்து வரவிருக்கும்புத்தாண்டை எங்கள் குடும்பத்தின ருடன் கொண்டாடுவோம். ஆனால் குடும்பங்களை விட்டு இங்கே வந்து போராடிக்கொண்டிருக்கும் நாங்கள் எப்படி இதனைக் கொண்டாட முடியும்?சுமார் 78 லட்சம் பேர் இங்கே வீதியில் போராடிக் கொண்டிருக்கிறோம். இத்தகைய சூழ்நிலையில் எப்படி எங்களால் இதனைக் கொண்டாட முடியும்?” என்று செய்தியாளர்களிடமே எதிர்கேள்வி கேட்டார்கள்.இதற்கிடையில் மத்திய அரசு இரு கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதாக வெளியான அறிவிப்புகள் கூட வாயளவில் கூறப்பட்டுள்ளவைகளே தவிர, போராட்டம் முழுமையாகத் திரும்பப் பெறப்பட்ட பின்னரே அது தொடர்பான அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்ததாக விவசாயிகள் கூறினர்.

பயிர்களை எரிப்பதற்காகத் தண்டனை அளிக்கும் ஷரத்துக்களைத் திரும்பப் பெறுவதாக அரசாங்கம் அளித்துள்ள ஒப்பந்தம் குறித்து, விவசாயிகள், மத்திய வேளாண்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, அரசாங்கம் இக்கோரிக்கையை கொள்கையளவில் மட்டுமே ஏற்றுக்கொண்டிருப்பதாகவும், போராடும் விவசாயிகள் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்க்கப்படும்வரை இதில் எவ்வித நடவடிக்கையும் எடுத்திடத் திட்டம் எதுவும் இல்லை என்றும் கூறியிருக்கிறார்கள்.நான்கு கோரிக்கைகளில் இரு கோரிக்கைகளுக்கு தீர்வுகாணப்பட்டு விட்டதாக அரசுத்தரப்பில் கூறப்பட்டபோதிலும், விவசாயிகள் ஓர் அங்கு லம்கூட போராட்டக்களத்திலிருந்து பின்வாங்கவில்லை. “எங்களின் அனைத்துக்கோரிக்கைகளும் நிறை
வேற்றப்படும்வரை இங்கேயிருந்து ஓர் அங்குலம் கூட பின்வாங்க மாட்டோம்” என்று அவர்கள் தெரிவித்தனர். “தீர்வுகாணப்பட்டதாகக் கூறப்படும் கோரிக்கைகள் எங்களின் அடிப்படைக் கோரிக்கைகள் அல்ல,” என்று கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகப் போராடும் விவசாயிகள் கூறினார்கள்.குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்படுவதற்கான சட்டரீதியான உத்தரவாதம் மற்றும் வேளாண்சட்டங்கள் ரத்து செய்யப்படுதல் மிகவும் முக்கியமான கோரிக்கைகளாகும் என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர். (ந.நி.)

;