india

img

நடிகர் பிரித்விராஜ் கேரளத்தின் உணர்வையே பிரதிபலித்துள்ளார்... சங்-பரிவாரங்களின் மிரட்டல் இங்கு எடுபடாது....

திருவனந்தபுரம்:
லட்சத்தீவு விவகாரத்தில், மத்தியபாஜக அரசுக்கு எதிராக கடும் எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன. 

மதுவுக்கு அனுமதி, ஆனால் மாட்டிறைச்சிக்குத் தடை போன்ற தங்களின் அடாவடிகளை, மதப் பிரச்சனையாக மக்கள் கடந்து செல்வார்கள் என்று பிரதமர் மோடியும் உள்துறைஅமைச்சர் அமித்ஷாவும் கணக்குப் போட்டிருந்தனர். ஆனால், அந்தக் கணக்கு பொய்த்துப் போய்விட்டது.

லட்சத்தீவில் முஸ்லிம்கள் அதிகம் என்றாலும், அவர்களுக்கு எதிரான மத்திய பாஜக அரசின் அடுக்குமுறைக்கு எதிராக அனைத்துத் தரப்பினரும் திரண்டெழுந்தனர். வழக்கம் போல கேரளம் இதில் முதல் வரிசையில் நின்றது.இதனிடையே, பிரபல மலையாளநடிகர் பிரித்விராஜ், ‘லட்சத்தீவில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் எதுவானாலும், நிச்சயம் அங்குள்ள மக்களுக்கு அது ஏற்றதல்ல என்பதும்,

தீவு மக்கள் அங்கு நியமிக்கப்பட் டுள்ள புதிய அதிகாரியினால் மகிழ்ச்சியாக இல்லை என்பதும்தான்எனக்குத் தெரிய வரும் உண்மையாக உள்ளது; இந்நிலையில், லட்சத்தீவில் நிலவி வரும் பிரச்சனையைப் பற்றி அந்த மக்களின் கருத்தைஅரசு கேட்க வேண்டும்’ என்று டுவிட்டரில் பதிவிட்டார். அவரின் இந்தக் கருத்து பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், பாஜகவினர் உள்ளிட்ட சங்-பரிவார கூட்டங்களோ கடும் ஆத்திரம் அடைந்து, பிரித்விராஜை வசைபாடியதுடன், அவருக்கு மிரட்டல் விடுக்கும் வேலையிலும் இறங்கினர்.

இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன், ‘பிரித்விராஜ் வெளிப்படுத்திய உணர்வு நமது சமூகத்தின்உணர்வு. இது கேரளாவில் வாழும்எவருக்கும் இயல்பாக வரும் ஒருஉணர்வு. பிரித்விராஜ் அதனைசரியான வழியில் வெளிப்படுத்தியுள்ளார்’ என்று பாராட்டியுள்ளார்.‘சங்பரிவார் அமைப்பினர் எல்லோரிடமும் சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறையை பின்பற்றுகின்றனர்; பிரித்விராஜூக்கு எதிராகவும் அதையே செய்கின்றனர். அதற்கு, கேரள சமூகம் உடன்படாது.எப்போதும் எதிராகவே நிற்கும்’ என்றும் கூறி பிரித்விராஜூக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

;