india

img

த்ரீ இன் ஒன் செய்திகள்....

 கொ.ம.தே. கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு

சென்னை:
திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக-கொமதேக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.3 தொகுதிகளிலும் கொமதேக வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

                                     *************   

புதுவை அதிமுக கூட்டணியிலிருந்து பாமக விலகல்

புதுச்சேரி:

புதுவை அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 5 தொகுதிகள் கேட்ட நிலையில் ஒரே ஒரு தொகுதிஒதுக்கியதால் அணியிலிருந்து விலகுவதாகவும்தனித்து போட்டியிடுவதாக வும் மாநில அமைப்பாளர் தன்ராஜ் தெரிவித்துள்ளார்.  

                                     *************   

தில்லியில்  2048 ஒலிம்பிக்

புதுதில்லி:

2048-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை தில்லியில் நடத்துவோம் எனஅம்மாநில முதல்வர்அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.  சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தில் பேசிய அவர், ஒலிம்பிக் தொடரை நடத்துவதற்கான அனைத்து கட்டமைப்பு களையும் ஏற்படுத்துவோம் என தெரிவித்துள்ளார்.

;