india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்

உலகளவில் 300 கோடி மக்கள் கடுமையான தண்ணீர்தட்டுப்பாட்டை சந்தித்து வருவதாகஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

                                  ************** 

கட்டுமானத் துறை முதல் காலாண்டில் 50 சதவீத சரிவை சந்தித்துள்ள நிலையில், 2 - வது காலாண்டில்8.6 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.

                                  ************** 

சபரிமலையில் தினசரி பக்தர்கள்எண்ணிக்கையை 10 ஆயிரமாக அதிகரிக்க கேரள தலைமை செயலர் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

                                  ************** 

கொரோனா தொற்றை கண்டறிவதற்கான புதியமுறைக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

                                  ************** 

மறைந்த பிரபல கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான் டியாகோ மாரடோனா  கேரளாவிற்கு வருகை தந்த போது அவர் தங்கியிருந்த அறை அருங்காட்சியமாக மாற்றப் பட்டுள்ளது.

                                  ************** 

ஈரான் அணு விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிசாதே படுகொலை செய்யப்பட்டதற்குப் பின் னணியில் இஸ்ரேல் இருப்பதாக ஈரானிய ஜனாதிபதி  ஹசன் ரூஹானி குற்றம்சாட்டியுள்ளார்.

                                  ************** 

அமெரிக்க ஜனாதிபதி தேர் தல் குறித்த டிரம்பின் வாக்குமோசடிக் குற்றச்சாட்டுகள் கேலிக்குரியவை என அமெரிக்க முன்னாள் தேர்தல் பாதுகாப்புத் தலைவர் கிறிஸ் கிரெப்ஸ் தெரிவித்துள்ளார்.

;