india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்

ஹரியானா, உத்தரப்பிரதேச மாநிலங்களில் சிந்து சமவெளி நாகரிகத்தை சேர்ந்த 7 இடங்களில் வாழ்ந்த சிந்து சமவெளி நாகரிக மக்களிடையே பன்றி, மாடுகள், ஆடுகளின் இறைச்சி உண்ணும் பழக்கம் இருந்துள்ளது என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவரான அக்சயத்தா சூர்யநாராயணன் என்பவர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 

                                                      **********************

வேளாண் சட்டங்களை வாபஸ்பெறக்கோரி டிசம்பர் 12 அன்று நாடு முழுவதும் அனைத்துடோல்கேட்களிலும் கட்டணம் செலுத்தாமல் செல்லும் போராட்டத்தை விவசாயிகள் அறிவித்துள்ளனர். டிசம்பர் 14 அன்று பாஜகவின் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தலைவர்களின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளை முற்றுகையிடுவது என்றும் அறிவித்துள்ளனர்.

                                                      **********************

நீட் தேர்வெழுதிய மாணவர்களின் விடைத்தாள்களில் முறைகேடு நடைபெற வாய்ப்பு உள்ளதா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டுள்ளது.

                                                      **********************

பாலியஸ்டர் நூல்விலை உயர்ந்து வருவதால், நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஜவுளிகள் மீண்டும் தேங்கியுள்ளன.இதனால்  உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர். 

                                                      **********************

அடுத்த ஆண்டு முதல் ஆண்டுக்கு நான்கு முறை ஜேஇஇ தேர்வுகள் நடத்தப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்  தெரிவித்துள்ளார்.

                                                      **********************

பெட்ரோல் விலை லிட்டருக்கு 86.51 ரூபாய், டீசல் லிட்டருக்கு 79.21 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

                                                      **********************

கடந்த 2000 முதல் 2019 ஆம் ஆண்டு வரை இந்தியாவில்பாம்பு கடித்து 12 லட்சம் பேர் பலியானதாக வாஷிங்டன் பல்கலைக் கழக சுகாதார அளவீடுகள்-கல்வி நிறுவன ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

;