india

img

‘நாரதா’ ல‌ஞ்ச முறைகேடு வழ‌க்கு.... மம்தா கட்சி அமைச்சர்கள் 2 பேர் உட்பட 5 பேரு‌க்கு ச‌ம்ம‌ன்....

கொல்க‌த்தா:
‘நாரதா’ டேப் ஊழல் வழக் கில், மேற்குவங்க திரிணாமுல் அமைச்சர்கள் 2 பேர் உட்பட 5 பேருக்கு சிபிஐ நீதிமன்றம் சம் மன் அனுப்பியுள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு, ‘நாரதா நியூஸ்’ என்றஇணையதள செய்தி நிறுவனத் தின் ஆசிரியர் மேத்யூ சாமுவேல், ‘ஸ்டிங் ஆபரேசன்’ ஒன்றைநடத்தினார். அதாவது, ‘நாரதா’இணையதளத்தைச் சேர்ந்தவர்கள், தங்களை ஒரு தனியார் நிறுவனத்தின் ஊழியர்களாக அறிமுகப்படுத்திக் கொண்டு, திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்த மேற்கு வங்க அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்களை அணுகினர். அரசு தங்கள் நிறுவனத்திற்கு சாதகமாக நடந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அமைச்சர்களும் அதற்கு ஒப்புக் கொண்டு, பிரதிபலனாக கட்டுக் கட்டாக லஞ்சப் பணத்தை வாங்கிப்போட்டனர். இது ரகசியமாக கேமிராவில் படம் பிடிக்கப்பட்டு,பின்னாளில் ‘நாரதா’ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.மேற்கு வங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய இந்தஊழல் முறைகேடு தொடர்பாக,வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, மேற்குவங்க அமைச்சர்கள் பிர்ஹாத் ஹக்கீம் மற்றும் சுப்ரதா முகர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ மதன் மித்ரா, கொல் கத்தா முன்னாள் மேயர் சோவன்சாட்டர்ஜி மற்றும் இடைநீக்கம் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி எஸ்.எம்.எச். மிர்சா உள் ளிட்டோர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், புதனன்று அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில், நவம்பர் 16-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு, மேற்குவங்க அமைச்சர் கள் பிரிஹாத் ஹக்கீம் மற்றும் சுப்ரதா முகர்ஜி உள்ளிட்ட 5 பேருக்கும், சிபிஐ நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

;