india

img

கேரள தங்க கடத்தலில் சொப்னாவை ‘அப்ரூவர்’ ஆக்க முயற்சி.... சிவசங்கரன் பெயர் குற்றப்பத்திரிகையில் இல்லை....

கொச்சி:
யுஏஇ தூதரக பார்சலில் தங்கம் கடத்தப்பட்ட வழக்கின் உண்மையான குற்றவாளிகளை ஏற்கனவே தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ)திரைமறைவாக்கியுள்ள நிலையில் சொப்னாவையும் மன்னித்து அப்ரூவராக்கும் முயற்சி நடைபெறுகிறது. தொடர்ச்சியாக பல நாட்கள் விசாரணை நடத்தி பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் முன் னாள் ஐடி செயலாளர் எம்.சிவசங்கரன் ஐஏஎஸ் இன் பெயரை குற்றப்பத்திரிகையில் சேர்க்க முடியவில்லை.

கேரளத்தில் உள்ளாட்சித் தேர்தல்களுக்காக பாஜகவின் உதவியோடு தயாரிக்கப்பட்ட கதைகள் தோல்வியுற்ற நிலையில் சட்டமன்றத் தேர்தல்களுக்காக சட்டப்பேரவை தலைவர் பி.ஸ்ரீராமகிருஷ்ணன் மீது அடுத்த குறி வைக்கப்பட்டுள்ளது. அவரிடம் விசாரணை நடத்த சட்ட ஆலோசனை கோரிய செய்தி அதற்குமுன்னோடியாக உள்ளது. தங்க கடத்தில் வழக்கில் முக்கிய குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் உட்பட ஐந்து பேரை மன்னிப்பு கோரும் (அப்ரூவர்) சாட்சியாக்கியுள்ளது என்ஐஏ. குற்றம் சாட்டப்பட்ட இரண்டாவது நபரான சொப்னா சுரேஷுக்கும் மன்னிப்பு வழங்கி அப்ரூவராக்க என்ஐஏ முடிவு செய்துள்ளது. 

கறுப்பு பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 30 பேரில் நான்கு பேருக்கு எதிராகமட்டுமே வழக்குப் பதிவு செய்துள்ள சுங்கத் துறை, அரசியல் நோக்கங்களுடன் காய் நகர்த்துகிறது. ஆரம்பத்தில் விசாரணையைத் தொடங் கிய என்ஐஏ, அதன் முதல் குற்றப்பத்திரிகையை ஆறு மாதங்களுக்கு பிறகே தாக்கல் செய்தது.இந்த தங்க கடத்தலில் தீவிரவாத தொடர்பு, தேச விரோத தலையீடுகள் விசாரிக்கப்பட வேண்டும். இதுவரை கைது செய்யப்பட்ட 25 பேர் மீது யுஏபிஏ சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது, ஆனால் அதை நிறுவ எந்த ஆதாரமும் இல்லை. நீதிமன்றமும் அதைக் குற்றம் சாட்டியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக ஆரம்பத்தில் விவரிக்கப்பட்ட நான்காவது குற்றம் சாட்டப்பட்ட சந்தீப் நாயரை அப்ரூவராக்கி தவறுகளை மறைக்கும் முயற்சியை என்ஐஏ மேற்கொண்டுள்ளது. 

கடத்தல் வழக்கில் மூன்றாவது குற்றவாளியான பைசல் பரித் கைது செய்யப்படவில்லை. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துணைத் தூதர், அட்டாசேமற்றும் எகிப்திய அதிகாரி ஆகியோர் இந்த கடத்தலில் முக்கிய தொடர்புகள் இருப்பதாக என்ஐஏ நீதிமன்றத்தில் கூறியது. வெளிநாடு தப்பிச் சென்ற அவர்களை விசாரிக்க முடியவில்லை. பல நாட்களாக விசாரிக்கப்பட்ட முன்னாள் தகவல் தொழில்நுட்ப செயலாளர் எம்.சிவசங்கரை குற்றவாளியாக சேர்க்கவும் முடியவில்லை.இந்த வழக்கு தொடர்பான சுங்கத்துறையின் முதல் கட்டம் விசாரணை துரிதமாக நடத்தப்பட்டது. வழக்கமான கடத்தல் வழக்கைத்தாண்டி ஐக்கிய அரபு எமிரேட் தூதரகத்துடனான உறவு முக்கியமானது என்று சுங்கத்துறை  தெரிவித்தது. திடீரென்று கதை மாறியது. விசாரணை அதிகாரிகள் பலர்  மாற்றப்பட்டனர். புதிய தலைவர் வந்தார். எம்.சிவசங்கரை காவலில் எடுக்க சுங்கத்துறையும் அமலாக்கத்துறையும் போட்டியிட்டன. இதற்காக புதிய வழக்கும் பதிவு செய்யப்பட்டது. தங்கக் கடத்தலில் கறுப்பு பணத்தைத் தேட வந்த அமலாக்கத்துறை, குர்ஆன், பேரீச்சம்பழம், யூனிட்டாக், டாலர் கடத்தல் ஆகியவற்றை வலிந்து இழுத்துக் கொண்டது. குற்றம் சாட்டப்பட்ட முதல் நான்கு பேர் மீது மட்டுமே அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. ஹவாலா சம்பந்தப்பட்ட குற்றம் சாட்டப்பட்ட 20 பேர் அடையாளம் காணப்படவில்லை.

;