india

img

மோடி அரசின் பட்ஜெட் மக்களுக்கு எதிரான சவால்.... அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் கைகழுவ முயலுகிறது..... கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு....

திருவனந்தபுரம்:
புதிய தாராளமயக் கொள்கை அமலாக்கத்தை அதிக வீரியத்துடன் செயல்படுத்தப் போவதாக என்டிஏ அரசு அறிவித்ததன் பிரதிபலிப்பே மத்திய நிதிநிலை அறிக்கை என்றும் இதன்மூலம், நாடு முற்றிலும் வணிக நலன்களுக்கு திறந்து விடப்படும் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

பொதுத்துறை நிறுவனங்களை மேலும் தனியார்மயமாக்குவதற்கும், காப்பீட்டுத் துறை உட்பட அந்நிய முதலீட்டை அதிகரிப்பதற்கும் நிதிநிலை அறிக்கை வழிவகுத்துள்ளது. இதன்மூலம் அனைத்து துறைகளிலிருந்தும் அரசாங்கம் பின்வாங்கும். இது மக்களுக்கு ஒரு சவால். வேளாண் துறையிலிருந்து முற்றிலுமாக விலகி தனியார் ஏகபோகங்களுக்கு திறந்திருக்கும் புதிய விவசாயக் கொள்கைகளின் பாதையில் மத்திய அரசு தொடரும் என்பதையும் பட்ஜெட் ஒப்புக் கொள்கிறது. அதுமட்டுமல்ல, விவசாயிகள் அமைப்புகளுடனான அனைத்து பேச்சுவார்த்தைகளும் வெறும் நாடகங்கள்தான் என்பதையும், சர்ச்சைக்குரிய சட்டங்களை ரத்துசெய்ய அவர்கள் விரும்பவில்லை என்பதையும் பாஜக தலைமையிலானமத்திய அரசின் பட்ஜெட் உறுதிப் படுத்தியுள்ளது.

விவசாயிகளுக்கு கடன் சுமை
விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதற்கு பதிலாக, அவர்களுக்கு கூடுதல் கடன் வழங்க மத்தியஅரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.இது அவர்களை மேலும் கடன் வலைக்குள் சிக்கவைக்கும் என்பது மட்டுமல்ல அவர்களின் பிரச்சனைகளை இது தீர்க்காது. இது விவசாயத் துறையில் தற்போதுள்ள பிரச்சனைகளை மேலும் மோசமாக்கும். விவசாய அமைப்புகளால் அவ்வப்போது முன்மொழியப்பட்ட சூத்திரத்தின்படி (சி 2 + 50 சதவிகிதம்) ஆதரவு விலையைக் கூட மத்திய அரசு அறிவிக்கவில்லை.கோவிட் தொற்றுநோயைத் தொடர்ந்து வருமானத்தை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க இந்த பட்ஜெட்டில் எதுவும் இல்லை. பட்ஜெட் அறிவிப்புகளில் சமூக பாதுகாப்பு ஓய்வூதிய விகிதங்கள், வருமான வரி விலக்குகள் அல்லது சில் லரை விற்பனையாளர்கள் மற்றும் வணிகங்களுக்கான சிறப்பு நிதி தொகுப்பு ஆகியவை இல்லை. இதன்மூலம் மத்திய நிதி அமைச்சர் இந்திய மக்களை ஏமாற்றினார். அதே நேரத்தில், பட்ஜெட் அறிவிப்புகள் இந்தியாவில் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருவதைக் காட்டுகின்றன. பிப்ரவரி 1 அன்று பங்குதாரர்களின் வருவாய் ஒரே நாளில் ரூ.5.2 லட்சம் கோடிஅதிகரித்துள்ளது.

நிதி நெருக்கடிக்குள் தள்ளும்
பண்ணை செஸ் என்ற பெயரில்பெட்ரோல் மற்றும் டீசல் மீது எரிபொருள் செஸ் விதிக்கப்பட்டுள்ளது. இது பணவீக்கத்தை அதிகரிக்கும், பொதுமக்களை அதிக நிதி நெருக்கடிக்குள் தள்ளும். இரும்பு, எஃகு மற்றும் மின்சாரத்தின் விலையை அதிகரிக்க இன்றைய பட்ஜெட்டில் திட்டங்கள் உள்ளன. இது, ஏராளமான மக்கள்வேலை செய்யும் கட்டுமானத் துறையை மோசமாக பாதிக்கும். இந்தியப் பொருளாதாரம் ஒரு பெரிய நெருக்கடியைச் சந்தித்த போதிலும், நாட்டின்பொருளாதாரத்தைத் தூண்டுவ
தற்கும், அதிகமான பணத்தை மக்களின் கைகளில் ஒப்படைப்பதற்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது.உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் வேறுபாடு கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இங்கு டிஜிட்டல் கணக்கெடுப்பை அமல்படுத்துவது குறித்த அறிவிப்பை அவசரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். அரசாங்க திட்டங்களை திறம்பட திட்டமிடுவதற்கும் செயல்படுத்துவதற்கும் துல்லியமான புள்ளிவிவரங்கள் அவசியம். அவற்றைத் தயாரிப்பதில் டிஜிட்டல் கணக்கெடுப்பு ஒரு பெரிய சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

கிப்பியின் முன்மாதிரி
உட்கட்டமைப்பு மேம்பாட்டிற் கான வளர்ச்சி நிதி நிறுவனம் (டிஎப்ஐ)அமைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார். உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக தனியார் துறையிலிருந்து முதலீட்டை டிஎப்ஐ ஏற்றுக் கொள்ளும் என்பது புரிந்து கொள் ளப்படுகிறது. கிப்பி (கேரள உட்கட்டமைப்பு நிதி வாரியம்) அரசியலமைப் பிற்கு விரோதமானது என்று சொல்பவர்கள் கிப்பி மூலம் கேரளம் முன்வைத்த முன்மாதிரியைப் பின்பற்றுகிறார்கள் என்பதை கவனிக்க வேண் டும் என்று முதல்வர் கூறினார்.

;