india

img

இந்தியை தேசிய மொழியாக்கும் முயற்சிக்கு எதிராக போராட்டம்..... கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி அழைப்பு.....

பெங்களூரு:
இந்தியை தேசிய மொழியாக்கும் முயற்சிக்கு எதிராக கன்னடர்கள் போராட வேண்டும் என்று கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சித் தலைவருமான குமாரசாமி அழைப்பு விடுத்துள்ளார். 

இதுதொடர்பாக தனது டுவிட்டர்பக்கத்தில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

மத்தியில் ஆட்சி செய்த அனைத்து அரசுகளும் மறைமுகமாக ஹிந்தி மொழியை திணிக்க முயற்சி செய்து வந்துள்ளன. கன்னடத்தை 3-ஆம் நிலை மொழியாகவே அவர்கள் பார்க்கிறார்கள். சமீபகாலமாக ‘ஒரே நாடு ஒரே மொழி’ என்ற அடிப்படையில் இந்தியை தேசிய மொழியாக்க தீவிரமாக முயற்சி நடக்கிறது.மத்திய அரசின் துறைகளில் வேலை பெற வேண்டுமென்றால் இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்ற நிலை உள்ளது. இது உள்ளூர்மொழிகளை ஒழிக்க நடக்கும் முயற்சியாகும். இந்த முயற்சிகளுக்கு எதிராக நாம் போராட வேண்டியது அவசியம். மத்திய அரசின் சேவைகள் கன்னடத்தில் கிடைப்பது இல்லை. நாடாளுமன்றத்தில் கன்னடத்தில் பேசினால் அதற்கு  உரிய மதிப்பு அளிப்பது இல்லை. மத்திய அரசின்துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் கன்னடத்தில் பேசுவது இல்லை. கர்நாடகத்திற்கு உரிய ஜிஎஸ்டி பங்குத் தொகை கிடைப்பது இல்லை.கன்னடர்கள் மூச்சுவிட ஆக்சிஜன்வழங்குவது இல்லை. நோய் களுக்கு தேவையான மருந்துகளை வழங்குவது இல்லை. ஆனால் கர்நாடகத்திடம் இருந்து வரவேண்டியது இருந்தால் அதை மட்டும் வசூலிக்காமல் மத்திய அரசு விடுவது இல்லை.இவ்வாறு குமாரசாமி குறிப்பிட் டுள்ளார்.

;