india

img

பசவராஜ் அமைச்சரவை விரிவாக்கத்தில் ஏமாற்றம்... கட்சித் தலைமையைக் கண்டித்து கர்நாடக பாஜகவினர் போராட்டம்...

பெங்களூரு:
கர்நாடக முதல்வர் பசவராஜ்பொம்மை தலைமையிலான புதிய அமைச்சரவை புதனன்று பதவியேற்றது. இதில், 29 பேர்புதிய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அவர் களுக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.நிகழ்ச்சியில், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை,முன்னாள் முதல்வர் எடியூரப்பா, பாஜக மேலிடப் பார்வையாளர் அருண் சிங், பாஜக மாநிலத் தலைவர் நளின்குமார் கட்டீல் மற்றும் புதிதாகப் பதவிஏற்ற அமைச்சா்களின் குடும் பத்தினர் கலந்துகொண்டனர்.புதிய அமைச்சரவையில் லிங்காயத் பிரிவினருக்கு 9 (இவர்களில் பெண் ஒருவர்) அமைச்சர்கள்; ஒக்கலிகா பிரிவுக்கு 7 அமைச்சர்கள், இதர பிற் படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 6 அமைச்சர்கள், பட்டியல்வகுப்புக்கு 3 அமைச்சர்கள், பிராமணருக்கு 2 அமைச்சர்கள், பழங்குடி மற்றும் ரெட்டி பிரிவுகளுக்கு தலா 1 அமைச்சர்கள் என பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது.

எடியூரப்பா அமைச்சரவையில் துணை முதல்வராக இருந்தலட்சுமண் சவதி, அமைச்சர்களாகப் பணியாற்றிய ஜெகதீஷ் ஷெட்டர், சுரேஷ் குமார், அரவிந்த் லிம்பாவளி, யோகேஷ் வர், ஆர். சங்கர், ஸ்ரீமந்த் பாட் டீல் ஆகியோருக்கு புதிய அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ராஜு கவுடா, நேரு ஹோலேகர், அரவிந்த் பெல்லத் ஆகியோர் அமைச்சர் பதவியை எதிர்பார்த்திருந்த நிலையில், அவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால், ஆவேசமடைந்த பாஜகவினர், கர்நாடகத்தில் கட்சித் தலைமைக்கு எதிராகமுழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சரவை விரிவாக்கத்தில் தங்களுக்கு இருக்கும் அதிருப்தியை அவர்கள் வெளிப்படுத்தினர்.

;