india

img

உ.பி. அமைச்சரிடம் கேள்வி கேட்ட பத்திரிகையாளர் மீது தாக்குதல்.... ஹிந்து யுவ வாஹினியினர் வெறியாட்டம்.....

லக்னோ:
தடுப்பூசி தொடர்பாக, அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர் மீது, ஹிந்து யுவ வாஹினி அமைப்பைச் சேர்ந்த குண்டர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் உ.பி. மாநிலத்தில் நடந்துள்ளது.

மேலும், ஹிந்து யுவ வாஹினி-யினரை குற்றச்சாட்டிலிருந்து தப்பவிடும் வகையில், பத்திரிகையாளர்களே அவர்களுக்குள் தாக்கிக் கொண்டதாக கூறி, உ.பி.காவல்துறை வழக்கை முடித்து வைத்துள்ளது.உ.பி. மாநிலம் சித்தார்த்நகரிலுள்ள துமரியாகஞ்சில், திங்களன்று கொரோனா சிகிச்சை மையத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள் ளது. பாஜக-வைச் சேர்ந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஜெய்பிரதாப் சிங், இந்த மையத்தை திறந்து வைத்து, பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அப்போது, உள்ளூர் தொலைக் காட்சி நிருபரான அமீன் பரூக்கிஎன்பவர், ‘கொரோனா தொற்றுஅதிகரிப்புக்கு, தடுப்பூசி போடுவதில் ஏற்பட்ட தாமதம்தான் காரணமா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதற்காக, ஆத்திரமடைந்த காவி நிற முகக்கவசம் அணிந்திருந்த ‘ஹிந்து யுவ வாஹினி’ அமைப்பினர், பாஜகநிர்வாகியான லவ்குஷ் ஓஜா தலைமையில், அமீன் பரூக்கியைத் தனியாக இழுத்துச் சென்று, மிகக்கொடூரமான முறையில் தாக்கியுள்ளனர்.பின்னர் அமீன் பரூக்கியை காவல் நிலையத்திற்கு அழைத் துச் சென்று, அங்கு 3 மணிநேரம் தரையில் அமர வைத்ததுடன், சக நிருபர்கள் தாக்கியதில்தான், அவர் காயமடைந்தார் என்று எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பியுள்ளனர்.எனினும், அமீன் பரூக்கியை ‘ஹிந்து யுவ வாஹினி’ அமைப்பினர் தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி,உ.பி. மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், உள்ளூர் பாஜக எம்எல்ஏ ராகவேந்திரா பிரதாப் சிங்-கின் உத்தரவின் பேரிலேயே இந்த தாக்குதல் நடந்ததாகவும் குற்றச்சாட்டுக் கள் எழுந்துள்ளன.‘ஹிந்து யுவ வாஹினி’ என்றஅமைப்பானது, தற்போதையஉ.பி. முதல்வர் ஆதித்யநாத் தால் தொடங்கப்பட்ட அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

;