india

img

உ.பி.யில் பாஜகவின் நிலை மிகமோசமாக உள்ளது... தோற்றுப் போனவர்களைக் கூட விடாமல் கட்சியில் சேர்த்து கொண்டாடுகிறது... சிவசேனா விமர்சனம்...

மும்பை:
உத்தரப்பிரதேசத்தில் பாஜக-வின் நிலை மோசமாக இருப்பதாகவும், அதனால்தான் தேர்தலில் தோற்றுப்போனவர்கள் தங்களிடம் வந்து இணைந்ததைக் கூட அந்தக் கட்சி கொண்டாடுவதாகவும் சிவசேனா விமர்சித்துள்ளது.இதுதொடர்பாக சிவசேனாவின் ‘சாம்னா’ பத்திரிகை தலையங்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

“ஜிதின் பிரசாதா, ஜோதிராதித்ய சிந்தியா, சச்சின் பைலட் ஆகியோர் இளம் தலைவர்கள். அவர்களிடம் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. ராஜீவ் சதாவ்,அகமது பட்டேல் ஆகியோரின் மறைவுக்கு பிறகு ஏற்கெனவே காங்கிரசில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இளம் தலைவர்கள் பாஜக-விற்குசெல்வது நல்லதல்ல. உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியை தழுவிய பிரசாதா, பாஜகவில் இணைந்து உள்ளார்.பிரசாதாவின் குடும்பத்தினர் காங்கிரஸ் விசுவாசிகள். மன்மோகன்சிங் அமைச்சரவையில் கேபினட் அமைச்சராக பிரசாதா இருந்துள்ளார். ஆனாலும் அவர் நாடாளுமன்ற - சட்டப்பேரவைத் தேர்தல்களில் தோல்வி அடைந்துகொண்டே இருந்தார். அப்படிப்பட்டவர் கட்சியில் சேர்ந்ததைத்தான் பாஜககொண்டாடுகிறது. இது வேடிக்கையாக உள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள சாதிஅரசியல்தான் இதற்கு பின்னால் உள்ளது. பிராமணர்களின் வாக்குவங்கியை கருத்தில் கொண்டு பிரசாதா பாஜகவில் இணைக்கப்பட்டுள் ளார். ஒருவேளை அவருக்கு பிராமணர் வாக்குவங்கி இருந்தால் அந்தவாக்கு ஏன் காங்கிரசுக்கு வரவில்லை?இதுவரை உ.பி.யில் பாஜகவுக்கு எந்த முகமும் தேவைப்படவில்லை. நரேந்திர மோடிதான் எல்லாமுமாக இருந்தார். ராமர் கோவில் அல்லதுஇந்துத்துவாதான் வெற்றி வாக்குகளாக இருந்தன. தற்போது அங்கு நிலைமை மோசமாகி உள்ளது. எனவே அவர்களுக்கு பிரசாதாவின் ஆதரவு தேவைப்பட்டு உள்ளது.

காங்கிரஸ் தலைவர்கள் ஏன் கட்சி தாவுகிறார்கள் என்பதும் முக்கியப் பிரச்சனை ஆகும். பஞ்சாப்பிலும் காங்கிரசில் அதிருப்தியாளர்கள் உள்ளனர். கேரளா, அசாமில் வெற்றிபெற கூடிய இடத்தில் இருந்தும் காங்கிரஸ் வெற்றியை பெறமுடியவில்லை. புதுச்சேரியிலும் தோல்வி அடைந்தார்கள். ஆனாலும் அடுத்து என்ன செய்யவேண்டும் என்ற ஆலோசனை காங்கிரசில் நடக்கவில்லை. மகாராஷ்டிரம், கேரளா, கர்நாடகா தவிர மற்ற இடங்களில் காங்கிரஸ் தங்கள் இடத்தை தக்கவைக்கவே போராடி வருகிறது. இந்தஅரசியல் சீரற்ற நிலை ஜனநாயகத்துக்கு தீங்கு ஏற்படுத்தும்.காங்கிரஸ் சுதந்திரத்திற்கு முன் னும், பின்னும் பல வேலைகளை செய்து உள்ளது. நாட்டை உருவாக்க அந்த கட்சி பங்களித்து உள்ளது.இன்றும் நேரு, காந்தி ஆகியோர் நாட்டின் அடையாளமாக இருப்பதை மறுக்க முடியாது. அடிமட்ட அளவில் காங்கிரசுக்கு பலமான செல்வாக்கு உள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா அவரது பொறுப்பை செய்துவிட்டார். தற்போது ராகுல் காந்திதான் வலுவான அணியை உருவாக்க வேண்டும். அதுவே கட்சிக்கு முன் உள்ள சவால்களுக்கு பதிலாக அமையும்”.இவ்வாறு ‘சாம்னா’ தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டு உள் ளது.

;