india

img

கும்பமேளாவை அரசியல் ஆக்குவதை ஏற்க முடியாது என அவ்தேஷானந்த், ராம்தேவ் கொதிப்பு... எதிர்க்கட்சிகளுக்கு எதிராக சாமியார்களை இறக்கிவிட்ட பாஜக....

கான்பூர்:
கொரோனா தொற்றைக் கையாளுவதில் மோடி அரசு உலக அளவில் அம்பலப்பட்டு நிற்கிறது.

கொரோனா 2-ஆவது தீவிரமாகி வந்த நேரத்தில், பல லட்சம் பேர் களைக் கூட்டி இடைவிடாமல் தேர்தல்பிரச்சாரம் செய்ததும், 70 லட்சம் பேர்ஒரே இடத்தில் கூடிய கும்பமேளாவுக்கு அனுமதி கொடுத்தது; 2-ஆவது அலை குறித்து, முன்கூட்டியே மருத் துவ வல்லுநர்கள் எச்சரித்தும், படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர், தடுப்பூசிக்கான ஏற்பாடுகளை செய்யாதது;தனியார் முதலாளிகள் தடுப்பூசி விலையை உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்கியது ஆகியவற்றுக்காக சர்வதேச ஊடகங்களின் கடும் விமர்சனங் களைச் சந்தித்து வருகிறது.ஆனால், இவை எவற்றுக்கும் முறையாக பதிலளிக்காத பிரதமர் மோடியும், பாஜக உள்ளிட்ட ஆர்எஸ்எஸ் பரிவாரங்களும், பிரச்சனையைத் திசைத்திருப்பும் வகையில், இந்தியநாட்டின் பெருமையையும், பிரதமர்மோடியின் மதிப்பையும் குறைக்க சர்வதேச அளவில் சதி நடப்பதாகவும், காங்கிரஸ் அவர்களுடன் கூட்டுச் சேர்ந்துள்ளது என்றும் கூறி, அதற்கான ஆதாரம் இதோ என்று போலியான ‘டூல் கிட்’ ஒன்றை வெளியிட்டுள்ளன. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தோ, ஒருபடி மேலேசென்று கொரோனா தொற்றுப் பரவலுக்கு அரசாங்கம் மட்டுமல்ல, மக்களும்தான் காரணம் என்று கொதித்துப் போனார்.

இந்நிலையில்தான், ஆர்எஸ்எஸ் - பாஜகவுக்கு ஆதரவாக, ‘ஜூனா அஹாடா’ என்ற சாமியார் சங்கத்தின் தலைவர் அவ்தேஷானந்த் கிரி மகராஜ் களத்தில் குதித்துள்ளார்.‘நம் தேசத்தின் கலாச்சாரம், பாரம்பரியங்கள், நம்பிக்கைகள், பூஜைகள் திட்டமிட்டுக் களங்கப்படுத்தப்படுகின்றன’ என்று கூப்பாடு போட்டுள்ளஅவர், ‘உயர்ந்த மதிப்புகள், பாரம்பரியத்தின் மீது நம்பிக்கை கொண்டிருக் கும் இந்த தேசத்தில் நீங்கள் பிறந்திருந்தால், கும்பமேளாவை அரசியலாக்குவது சரியானது அல்ல; சாமியார்கள் சமூகம் இதை வன்மையாகக் கண்டிக்கிறது’ என்று கூறியுள்ளார்.‘ஹரித்துவாரில் கும்பமேளா நடந்து கொண்டிருந்தபோதே, பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து விட்டது. ஆனால்,கும்பமேளா நடைபெற்ற உத்தரகண்டில் கொரோனா தொற்று நிலவரம் தீவிரமாக இல்லை’ என்று சமாளித்துள்ளார்.‘மகா நிர்வாணி அஹாடா’ என்றநிர்வாண சாமியார்கள் சங்கத்தின் தலைவர் கபில் தேவ் தாஸ், கொரோனா தொற்றால் கும்ப மேளாவிலேயே இறந்து போனதையும், அதன்பிறகுதான் கும்பமேளா முன்கூட்டியே முடித்துக் கொள்ளப்பட்டது என்பதையும் மறைத்து, அவ்தேஷானந்த் கிரி எதிர்க்கட்சிகள் மீது பாய்ந்துள்ளார்.கார்ப்பரேட் சாமியார் ராம்தேவும் தன்பங்கிற்கு எதிர்க்கட்சிகளைக் கண்டித்துள்ளார். ‘டூல்கிட் தயாரித்து கும்பமேளாவையும், இந்து மதத்தையும் அவமதிக்க பெரிய சதி நடந்துள்ளது. இதுபெரிய குற்றம். 100 கோடிக்கு மேற் பட்ட இந்துக்களை அவமதிப்பதை அவர்கள் நிறுத்த வேண்டும். இத்தகைய இந்து விரோத, இந்திய விரோதசக்திகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும்’ என்று ராம்தேவ் குறிப்பிட்டுள்ளார்.

;