india

img

திரிணாமுலுடன் இணையாமலேயே; பாஜக-வை எதிர்த்துப் போராட்டம்.... ‘ரைஜோர் தளம்’ தலைவர் அகில் கோகோய் அறிவிப்பு....

கவுகாத்தி:
பாஜக-வை எதிர்க்கும் போராட்டத்தில் திரிணாமுல் கட்சியுடன் ஒன்றுபட்டு நிற்கத் தயார்; அதற்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைய மாட்டேன்” என்று அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரைஜோர் தளம் கட்சித் தலைவர் அகில் கோகோய் தெரிவித்துள்ளார்.

அசாமில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராடியதற்காக பயங்கரவாத தடைச் சட்டத்தில் (UAPA) 18 மாதங்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டவர் அகில் கோகோய். ‘ரைஜோர் தளம்’ என்ற கட்சிக்கு தலைவராக இருக்கும் அகில், அண்மையில் நடைபெற்ற அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் சிறையில் இருந்தபடியே எம்எல்ஏ-வாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.இதனைக் கண்ட மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அகில் கோகோய், திரிணாமுல் சேர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். நேரிலும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். ஆனால்,  திரிணாமுல் கட்சியோடு இணையப் போவதில்லை என்று அகில் கோகோய் அறிவித்துள்ளார்.

“திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் இதுவரை 3 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரும் இந்த பேச்சின் போது இருந்தார். அவர்கள் என்னை திரிணாமுல் காங்கிரசின் அசாம் தலைவராக செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டனர். ஆனால் திரிணாமுல் காங்கிரசுடன் எங்கள் கட்சியை இணைக்க வேண்டாம் என முடிவெடுத்துள்ளோம். அசாமிற்கு அதன் சொந்த பிராந்திய உணர்வு உள்ளது. எங்களது கோரிக்கைய ஒரு பிராந்திய கட்சி தளத்திலிருந்து மட்டுமே நியாயப்படுத்த முடியும்” என்று அகில் கூறியுள்ளார்.  ; அதற்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைய மாட்டேன்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

;