india

img

இஸ்லாமிய வெறுப்பை சமூக ஊடகங்களில் பரப்பும் இந்துத்துவ அமைப்புகள்-ஆய்வில் தகவல்

சமூக ஊடகங்களில் இந்துத்துவவாதிகள் இஸ்லாமியர்கள் குறித்து தொடர்ந்து வெறுப்பு பிரச்சாரம் செய்வது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

ட்விட்டர், பேஸ்புக், வாட்ஸ்அப். ரெடிட் போன்ற சமூக ஊடங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் அதிகமாகியுள்ளன.இதன் மூலம் இஸ்லாமியர்களுக்கு எதிரான இந்துத்துவாவினரின் குற்ற செயல்கள் அதிகரித்துள்ளன என்று கலாச்சாரத்தை மையமாகக் கொண்ட ஆராய்ச்சி மற்றும் மதிப்பீடு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் இஸ்லாமிய எதிர்ப்பு மற்றும் வெறுப்புகளைப் பற்றி இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களின் அனுபவங்கள் என்ற தலைப்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்ற 60% பேர் சமூக ஊடகங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டும் பதிவுகளைப் பார்த்ததாகத் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 40% பேர் இஸ்லாமியர்கள் என்ற காரணத்தால் அவமதிக்கப்பட்டதாகவும், 60% பேர் இங்குக் குடியேறிய இஸ்லாமியர்கள் இந்தியாவைக் கைப்பற்றி விடுவார்கள் என்ற உள்ளடக்கத்துடன் பதிவுகளைக் கண்டதாகவும் கூறியுள்ளனர்.

64% பேர் கொரோனா தொற்றுநோய்க்கு இஸ்லாமியர்களே காரணம் என்று கூறிய பதிவுகளை சமுக ஊடகத்தில் கண்டதாகவும், 55% பேர் இஸ்லாமியர்களை பன்றிகள் மற்றும் நாய்களுடன் ஒப்பிடும் பதிவுகளைப் பார்த்ததாகவும் கூறியுள்ளனர்.