india

img

பஹாரி பசுக்களின் மரபணுக்களை பரப்ப இமாச்சல் பாஜக அரசு முடிவு.... ரூ.4 கோடியே 64 லட்சம் நிதியும் ஒதுக்கீடு ....

சிம்லா:
பஹாரி பசு இனத்தின் எண்ணிக்கையை அதிகரிப்பதென்று முடிவு செய்துள்ள இமாசல பிரதேச பாஜக அரசானது, அந்தபசுக்களின் மரபணுக்களை சேகரித்து பாதுகாக்கவும் பராமரிக்கவும் திட்டமிட்டுள்ளது.இமாச்சல பிரதேச மாநிலத்தில் இருக்கும்பஹாரி பசு இனங்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக குறைந்து வருவதாகவும், இதனாலேயே இந்த திட்டத்தை வகுத்துள் ளதாகவும் கூறியுள்ள இமாச்சல் அரசு, இதற்காக, ஒன்றிய அரசுடன் இணைந்து 3 ஆண்டுத் திட்டம் ஒன்றை அண்மையில் உருவாக்கியுள்ளது. மேலும், இதற்காக 4 கோடியே 64 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டையும் செய்துள்ளது.இமாச்சல் மாநிலத்தின் மொத்த கால்நடைகளின் எண்ணிக்கையில் பஹாரி பசுக்களின் எண்ணிக்கை 41 சதவிகிதம் ஆகும். ஆனால், மாநிலத்தின் பால் உற்பத்தியில் இந்த பசுக்களின் பங்கு 7.46 சதவிகிதமாக உள்ளது. அதாவது, குறைவான அளவிலேயே பால் கொடுப்பதாக பஹாரி பசு இனம்உள்ளது. ஆயினும், இந்த பசுக்களின் பால் மிகவும் ஆரோக்கியமானது. A2 பீட்டா-கேசீன் புரதம் மிகுந்து காணப்படுகிறது. இதய நோய், நீரிழிவு நோய், மன அழுத்தம்உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு இந்தப் பாலைகுடிப்பது மிகவும் சிறந்தது என மருத்துவ வல்லுநர்கள் கூறுவதாக இமாச்சல் அரசு தெரிவித்துள்ளது.இதன் அடிப்படையிலேயே தற்போது பஹாரி பசுக்களை பாதுகாக்க ஒன்றிய அரசுடன் இணைந்து திட்டம் ஒன்றை உருவாக்கியிருப்பதாக கூறும் இமாச்சல் அமைச்சர் கன்வார், இமாச்சல் பிரதேசத்தின் சீர்மூர்மாவட்டத்தில் 10.9 ஹெக்டேரில் பஹாரி பசுக்களின் அணுமந்தைகள் உருவாக்கப்பட்டு பாதுகாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

;