india

img

எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்யும் பாக்ஸ்கான் நிறுவனம்

எலெக்ட்ரிக் வாகன்ங்கள் பிரிவில் களமிறங்க முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான பாக்ஸ்கான் திட்டமிட்டுள்ளது.

தைவானை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான பாக்ஸ்கான் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் களமிறங்க இருப்பதாக அறிவித்து இருக்கிறது. தனது எலெக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாக்ஸ்கான் நிறுவன தலைவர் லியூ யங்-வே இந்த தகவலை வெளியிட்டார். இந்தியா, பிரேசில் மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முன்னதாக பாக்ஸ்கான் நிறுவனம் மூன்று எலெக்ட்ரிக் கான்செப்ட் வாகனங்களை அறிமுகம் செய்தது. பாக்ஸ்கான் எலெக்ட்ரிக் வாகனங்கள் முதற்கட்டமாக ஐரோப்பிய நாடுகளிலும் அதன்பின் மற்ற நாடுகளிலும் அறிமுகமாகும்.ஜெர்மன் நாட்டு கார் உற்பத்தியாளர்களுடன் மறைமுகமாக கூட்டணி அமைக்கவும் பாக்ஸ்கான் தயார் நிலையில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

;