புதுதில்லி,நவம்பர்.05- அதானி மீதான லஞ்சப் புகார் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி அளிக்காதது மற்றும் சிபிஐ விசாரணை நடத்தாது குறித்தும் சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது;
நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கப்படுவதும், ஒத்திவைக்கப்படுவதும் “மோதானி” என்ற ஒற்றை சொல்லுக்காக.
சூரிய ஒளி மின்சார ஒப்பந்தத்தில் ஊழல். எந்த மாநிலத்தில், எவ்வளவு கொள்முதலுக்கு, எவ்வளவு லாபத்திற்காக, எவ்வளவு லஞ்சம் என்றெல்லாம் சாகர் அதானியிடம் திரட்டிய ஆவணங்கள் அடிப்படையில் அமெரிக்க நீதித் துறை நடவடிக்கை. சி.பி.ஐ என்ன செய்கிறது?
உச்ச நீதிமன்றமே முன்னர் ஒருமுறை விமர்சித்தது போல "கூண்டுக் கிளிக்கு" எஜமானர் கண் சிமிட்டல் கிடைக்கவில்லையா? என சு.வெங்கடேசன் எம்.பி தனது கண்டனங்களைப் பதிவிட்டுள்ளார்.