india

img

ராகுல் காந்தியுடன் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா சந்திப்பு ஹரியானா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு

மல்யுத்த வீரர், வீராங்கனை பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் ஆகி யோர் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை புதனன்று சந்தித்து பேசினர். ஹரியானா தேர்த லில் வினேஷ் போகத், பஜ்ரங் பூனியா ஆகியோர் காங்கி ரஸ் சார்பில் போட்டி யிடலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி புதனன்று காலை காஷ்மீர் செல்வதற்கு முன் மல்யுத்த வீரர்களான வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகியோரை சந்தித்தார். 

ஹரியானாவில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. ராகுல் காந்தி உடனான சந்திப்பு ஹரியானா தேர்தலில் வினேஷ் போகத், பஜ்ரங் பூனியா ஆகியோர் காங்கிரஸ் சார்பில் போட்டியிடலாம் என்று எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.