பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் விவசாய உற்பத்தி 30 ஆண்டுகளில் இல்லாத அளவில் தேக்கமடைந்துள்ளதாகவும், விவசாயிகளின் கடன் பெருமளவு அதிகரித்துள்ளதாகவும் உச்சநீதிமன்றம் நியமித்த உயரதிகார குழுவின் இடைக்கால அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஐ முன்னாள் இயக்குநர் விஜய் சங்கர் (76) காலமானார். உடல் நலக்குறைவால் நொய்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.