புதுதில்லி, டிச. 3 - பெஞ்சால் புயலால் தமிழகம் பேரி டரைச் சந்தித்துள்ள நிலையில், பாதிப்பு தொடர்பாக நாடாளுமன்றத் தின் இரு அவைகளிலும் விவாதம் நடத்த வேண்டும் என்று தமிழக எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், ஒன்றிய பாஜக அரசா னது, விவாதத்திற்கு அனுமதி மறுத்த தால், தமிழக எம்.பி.க்கள் செவ்வா யன்று நாடாளுமன்றத்தின் இரு அவை களிலும் முழக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.
பெரும் பாதிப்பு
தமிழகத்தில் பெஞ்சால் புயலால், 14 மாவட்டங்கள் இயற்கைப் பேரிட ரைச் சந்தித்துள்ளன. வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளன. பல ஆயிரக் கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. வீடுகள், குடிசை கள் சேதம் அடைந்துள்ளன. கால்நடை கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டுள்ளன. நிலச்சரிவில் 8 பேரும், மின்சாரம் தாக்கி 3 பேரும் உயிரிழந்துள் ளனர். தமிழக அரசு மீட்புப் பணிகளை மேற்கொண்டு வந்தாலும், மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப பெருமளவு நிவாரண உதவிகளை வழங்க வேண்டி யதும், அதற்கான நிதியும் அவசியமாக உள்ளது. ஆனால், ஒன்றிய பாஜக அர சானது, கடந்தாண்டுக்கான வெள்ள நிவாரண நிதியையே இப்போது வரை வழங்காமல் தமிழகத்தை வஞ்சித்து வருகிறது.
நாடாளுமன்றத்தில் விவாதம்
எனவே, தற்போது பெஞ்சால் புய லாலும் தமிழகம் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ள நிலையில், ஒன்றிய பாஜக அரசு தாமதமின்றி நிதி ஒழக்கீடு வழங்க வேண்டும், பாதிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.
திமுக எம்.பி.க்கள் கனிமொழி, டி.ஆர். பாலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. சு. வெங்கடேசன், காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் இதுதொடர்பாக மக்க ளவை சபாநாயகரிடம் நோட்டீஸ் வழங்கினர்.
அவசர நிலையை உணருக; கனிமொழி எம்.பி.
மேலும், கனிமொழி எம்.பி. பேசுகையில், “தமிழகத்தில் பெஞ்சால் புயலானது 14 மாவட்டங்களில் மொத்தம் 69 லட்சம் குடும்பங்கள் மற்றும் 1.5 கோடி தனிநபர்களை பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. குறிப்பாக விழுப்புரம், திரு வண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அதி கனமழை பெய்துள் ளது. தமிழக அரசுக்கு தற்காலிக சீரமைப்பு பணிக்காக ரூ.2,475 கோடி தேவைப்படுகிறது. எனவே, (NDRF) தேசிய பேரிடர் மீட்பு நிதியில் இருந்து இடைக்கால நிவாரணமாக ரூ. 2,000 கோடியை உடனடியாக விடுவிக்க வும், சேதங்கள் குறித்த விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ள மத்தியக் குழுவை நியமிக்கவும் தமிழ்நாடு முத லமைச்சர் ஏற்கனவே கோரிக்கை விடுத்த நிலையில், இதுகுறித்த அவசர நிலையை உணர்ந்து, நாடாளுமன்றத் தில் விவாதம் நடத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
சு. வெங்கடேசன் எம்.பி. ஒத்திவைப்பு தீர்மானம்
புயல் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ள தமிழ்நாடு, புதுச்சேரிக்கு உட னடியாக ஒன்றிய அரசு அவசர நிவாரண நிதியை வழங்க வேண்டும் என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி., ஒத்திவைப்பு தீர்மானம் மூலம் வலி யுறுத்தினார்.
“தமிழ்நாட்டின் வடமாவட்டங்கள் டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மக்களின் அன்றாட வாழ்வுநிலை குலைந்து இருக்கிறது. உயிர் இழப்புகளும், சொத்து - ஆதார கட்டுமானங்கள் - பயிர்கள் பெருநாசத்திற்கு ஆளாகியுள்ளன. லட்சக்கணக்கான மக்கள் பெரும் துயரில் ஆழ்த்தப்பட்டுள்ள நிலையில் ஒன்றிய அரசு அவசர நிவாரண நிதியை தாமதமின்றி வழங்கி வாழ்க்கைக்காக போராடும் மக்களின் துயர் துடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும், இதுதொடர்பாக வழக்கமான அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும்” என்றும் சு. வெங்கடேசன் எம்.பி. குறிப்பிட்டார்.
மோடியின் வரலாற்றுத் தவறு: மாணிக்கம் தாகூர் எம்.பி.
“புதுவை, தமிழகத்தில் புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 12 பேர் பலியாகி யுள்ளனர். தமிழக முதல்வர் உடனடி நிதி கேட்டுள்ளார். ஆனால், ஒன்றிய அரசு தொடர்ந்து வரலாற்றுத் தவறைச் செய்து கொண்டுள்ளது. 2016 முதல் புயல் பாதிப்புகளுக்கு தமிழகம் ரூ. 43,993 கோடி கேட்ட நிலையில், ரூ. 1,729 கோடி மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையை மாற்ற வேண்டும். தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நியாயத்தை கொடுக்க வேண்டும். தமிழகமும், புதுவையும் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கும்போது பிரதமர் படம் பார்த்து கொண்டிருந்தது வரலாற்று தவறானது” என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் சாடினார்.
தமிழக அரசுக்கு நிதியை வழங்குங்கள்: வைகோ
மாநிலங்களவையில் மதிமுக தலைவர் வைகோவும் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கிப் பேசினார். நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மீனவர்களின் படகுகளும், மீன்பிடி வலைகளும் சூறாவளிக் காற்றால் சேதமடைந்திருக்கின்றன. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால், பயிர்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளன. காய்கறி மற்றும் பழங்களை சந்தைப்படுத்த முடியாமல் விளைபொருட்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. குடியிருப்புகளில் மழை நீர் புகுந்ததால், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே, மீட்பு மற்றும் நிவாரணப் பொருட்களை விரைந்து வழங்கவும், சேதங்களை மதிப்பீடு செய்யவும் ஆய்வுக் குழுவை அனுப்பி, பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக தமிழக அரசுக்கு போதிய நிதி வழங்க வேண்டும்” என்றார்.
ஆனால், இந்த தீர்மானங்களின் அடிப்படை யில் விவாதம் நடத்த, மக்களவை சபாநாயக ரும், மாநிலங்களவைத் தலைவரும் அனுமதி மறுத்து விட்டனர். இதனால் ஆவேசமடைந்த தமிழக எம்.பி.க்கள் அனைவரும் முழக்கங் களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.