india

img

கெஜ்ரிவாலை சந்திக்க எம்பிக்கு அனுமதி மறுப்பு

தில்லி மதுபான கொள்கை முறை கேடு தொடர்பான வழக்கில் அம் மாநில முதல்வர் கெஜ்ரிவாலை சிபிஐ வழக்கில் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனு உச்ச நீதி மன்றத்தில் நிலுவை யில் உள்ளது. இதனால், அவர் திகார் சிறையில் உள்ளார். 

இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங், தில்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு புதிய மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், ‘கட்சியின் எம்.பி., என்ற முறை யில் ஆம் ஆத்மி தலைவரும், முதல்வ ருமான கெஜ்ரிவாலை சந்தித்து ஆலோ சனை நடத்த திட்டமிட்டு இருந்தேன்.

ஆனால், திகார் சிறை நிர்வாகம் அனு மதி மறுத்து விட்டது. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’ என்று தெரிவித் திருந்தார். 

இந்த மனு புதனன்று விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களை யும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்க திகார் சிறை நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உத்தர விட்டனர். மேலும் வழக்கை செப்டம்பர் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.