india

img

மோடி அரசை கண்டித்து இடதுசாரி கட்சி எம்.பி-க்கள் ஆர்ப்பாட்டம்!

இந்தியர்களை கைவிலங்கிட்டு இழுத்து வந்த அமெரிக்க நிர்வாகத்திடம் விசுவாசம் காட்டி வாய் பொத்தி கிடக்கும் மோடி அரசை கண்டித்து இடது சாரி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்று, ஜனாதிபதி தேர்தலின்போதே டிரம்ப் அறிவித்தார். அதன்படியே தற்போது தேர்தலில் வென்று ஜனாதியாகி விட்ட நிலையில், எந்த மனிதாபிமானமும் இல்லாமல்- சம்பந்தப்பட்ட நாடுகளிடம் குறைந்தபட்சம் பேச்சுவார்த்தை கூட நடத்தாமல், அனைவரையும் நாடு கடத்தும் வேலையில் தீவிரமாகியுள்ளார். இதனொரு பகுதியாக, சட்ட விரோதக் குடியேறிகள் எனக் கண்டறியப்பட்ட இந்தியர்களில் முதற்கட்டமாக 104 பேரை, அமெரிக்கா நாடு கடத்தியுள்ளது. இவர்கள், அமெரிக்காவின் சான் அன்டோனியோவிலிருந்து புதனன்று காலை பஞ்சாப்பின் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் கொண்டு வந்து இறக்கிவிடப்பட்டுள்ளனர். இவர்களில் தலா 33 பேர் விகிதம் 66 பேர் குஜராத் மற்றும் ஹரி யானாவைச் சேர்ந்தவர்கள். 30 பேர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த வர்கள். ஏனையோர் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. வரும் நாட்களில் இன்னும் பல இந்தியர்கள் நாடு கடத்தப்படலாம் என்றும் அமெரிக்க அரசுத் தரப்பிலிருந்து தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே ராணுவ விமானத்தில் ஏற்றிவரப்பட்ட இந்தியர்களின் கை, கால்களை சுமார் 48 மணி நேரம் சங்கிலியால் பூட்டி விலங்குகளைப் போல அமெரிக்கா நடத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இந்தியர்களை கைவிலங்கிட்டு இழுத்து வந்த அமெரிக்க நிர்வாகத்திடம் விசுவாசம் காட்டி வாய் பொத்தி கிடக்கும் மோடி அரசை கண்டித்து இடதுசாரி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.