india

img

ஜெ.என்.யுவில் தாக்குதல் நடத்தியவர்களை விரைவாக கண்டுபிடித்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் - ஆனந்த் மகேந்திரா

தில்லி ஜெ.என்.யு-வில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை விரைவாக கண்டுபிடித்து, அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று ஆனந்த் மகேந்திரா தெரிவித்துள்ளார்.

தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நேற்று முகத்தில் துணியை கட்டிக் கொண்டு வந்து ஏபிவிபி குண்டர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.  இதில் அப்பல்கலைக்கழக மாணவர் பேரவை தலைவர் ஆயிஷ் கோஷ், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.  இந்த தாக்குதலில் காயம் அடைந்த 18 பேர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதை அடுத்து, இந்த சம்பவத்தை கண்டித்து, நாடு முழுவதும் பல்வேறு இடங்கள் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அதே சமயம் அரசியல் கட்சியினர் மற்றும் நடிகர்கள் தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா தனது கண்டனத்தை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் பதிவில், ”உங்கள் அரசியல் என்ன என்பது முக்கியமல்ல. உங்கள் சித்தாந்தம் என்ன என்பது முக்கியமல்ல. உங்கள் நம்பிக்கை என்ன என்பது முக்கியமல்ல. நீங்கள் இந்தியர்கள் என்றால், ஆயுதமேந்திய, சட்டவிரோத குண்டர்களை உங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. ஜே.என்.யுவில் தாக்குதல் நடத்தியவர்களை விரைவாக கண்டுபிடித்து, கடுமையான தண்டனை வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.