புதுதில்லி, ஏப்.10- பட்டப்படிப்பை முடித்த மாணவர்களுக்கு 6 மாதத்திற்குள் பட்டங்களை வழங்க வேண்டும் என்று பல்கலைக்கழகங்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) உத்த ரவிட்டுள்ளது. நாடு முழுவதும் ஏராளமான அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் செயல்பட்டு வரு கின்றன. இந்த கல்லூரிகளில் பட்டப்படிப்பு முடிக்கும் மாணவர்களுக்கு பட்டப்படிப் புக்கான சான்றிதழ் வழங்குவது காலதாம தம் செய்யப்படுகிறது. இதனால் மாண வர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. இது தொடர்பாக ஏராளமான புகார்கள் பல்கலைக் கழக மானியக்குழுவிற்கு வந்துள்ளன. இந்நிலையில் பல்கலைக்கழக மானி யக்குழு, நாடு முழுவதும் உள்ள பல்க லைக்கழகங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், பல்கலைக்கழ கங்கள், மாணவர்கள் பட்டப்படிப்பை முடித்த 6 மாதத்திற்குள்ளாக பட்டங்களை வழங்க வேண்டும். தாமதம் செய்தால் தொடர்பு டைய பல்கலைக்கழகங்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும். பட்டங்கள் வழங்கு வதில் பல்கலைக்கழகங்கள் தாமதம் செய்வ தாக நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான புகார்கள் வந்துள்ளன. பட்டங்களை பெறு வதில் ஏற்படக்கூடிய தாமதம் காரணமாக மாணவர்களின் வேலை வாய்ப்புகள் பாதிக் கப்படுவதாகவும் புகார்கள் வந்துள்ளன. இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படு கிறது என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக் கப்படுகிறது என்றும் எனவே, 6 மாதத்திற்குள் பட்டங்களை வழங்குவதற்கு அனைத்து பல்கலைக்கழகங்களும் முன்வர வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.