india

img

ஆறாத துயரம்... தீராத கண்ணீர்

புதுதில்லி, செப்.14- ஆறாத துயரத்தையும், தீராத கண்ணீரையும் பெருக்கெடுக்கச் செய்துவிட்டு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் லட்சக்கணக்கான தோழர்களிடமிருந்தும், கோடானு கோடி இந்திய பாட்டாளி வர்க்க மக்களிடமிருந்தும் நிரந்தரமாக விடை பெற்றார் பொதுச் செயலா ளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி. 

செப்டம்பர் 12 வியாழனன்று, உடல் நலக்குறைவால் காலமான தோழர் சீத்தாராம் யெச்சூரியின் இறுதி ஊர்வலம் செப்டம்பர் 14 சனிக்கிழமை பிற்பகல் 3மணிக்கு மேல், தில்லியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அலு வலகமான ஏ.கே.ஜி பவனிலி ருந்து, எய்ம்ஸ் மருத்துவமனை நோக்கி சென்றது. கட்சியின் அரசி யல் தலைமைக்குழு உறுப்பினர் கள் தலைமையில் பல்லாயிரக்க ணக்கானோர் கண்ணீர் மல்க, தோழர் சீத்தாராம் யெச்சூரிக்கு  செவ்வணக்கம் என உணர்ச்சிப் பெருக்குடன் முழக்கமிட்டவாறு அணி வகுத்தனர். 

மருத்துவமனையை அடைந்த பின், அவரது உடலுக்கு கட்சியின் அரசியல் தலைமைக்குழு இறுதி யாக அஞ்சலி செலுத்தியது. தோழர் சீத்தாராம் யெச்சூரியின் மனைவி சீமா சிஸ்டி, மகள் அகிலா யெச்சூரி, மகன் டேனிஷ் ஆகியோர் இறுதி யாக கண்ணீர் அஞ்சலி செலுத்தி பிரியா விடை கொடுத்தனர். 

கனத்த மவுனமும் ஆறாத சோக மும் அங்கே சூழ்ந்திருக்க, மருத்துவ மனை ஆராய்ச்சிக்காக தோழர் சீத்தாராம் யெச்சூரியின் உடலை பெற்றுக் கொண்டதற்கான சான்றி தழை மருத்துவ அதிகாரி, யெச்சூரி யின் மகள் அகிலாவிடம் அளித்தார். 

அதைத் தொடர்ந்து மருத்துவ மனை ஊழியர்கள், யெச்சூரியின் உடலை உள்ளே எடுத்துச் சென்ற னர். அந்தக் காட்சிகள், தேசம் முழு வதும் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தோழர்களின் கண்க ளில் நீர் பெருக்கெடுக்கச் செய்தது.

முன்னதாக, செப்டம்பர் 13 வெள்ளியன்று மாலை தோழர் யெச்சூரியின் உடல், 50 ஆண்டு களுக்கு முன்பு அவர் பயின்ற, மாணவர் இயக்கத்தின் மகத்தான தலைவராக மாபெரும் போராட் டங்களை நடத்திய தில்லி ஜவ ஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்கு கொண்டு செல்லப் பட்டது. அங்கு மாணவர்கள், பேரா சிரியர்கள் உள்ளிட்டோர் உணர்ச்சி மிகு அஞ்சலி செலுத்தினர். 

இதைத் தொடர்ந்து வெள்ளி யன்று இரவு தெற்கு தில்லியில் உள்ள வசந்த் குஞ்ச் பகுதியில் அமைந்துள்ள தோழர் சீத்தாராம் யெச்சூரியின் இல்லத்திற்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. 

அங்கு குடும்பத்தினரும், பல்வேறு அரசியல் தலைவர்க ளும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, பாரதிய ஜனதா கட்சி தலைவர் ஜே.பி.நட்டா, கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகான் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் இறுதி மரி யாதை செலுத்தினர். சீத்தாராம் யெச்சூரியின் குடும்பத்தினருக்கும், கட்சியின் தலைவர்களுக்கும் தங்களது ஆறுதல்களை தெரி வித்தனர். 

இரவு சீத்தாராம் இல்லத்தை  அடைந்த, அவரது ஆருயிர் தோழ ரும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான கேரள முதல்வர் பினராயி விஜயன், யெச்சூரியின் முகத்தைக் கண்டு, கண்கள் கலங்க, அவரது மனைவி மற்றும் மகளின் கரங்களை இறுகப்பற்றி ஆறுதல் சொல்லி, ஆறுதல் பெற்றுக் கொண்டார். 

இரவு நெடுநேரம் பிரகாஷ் காரத், பிருந்தா காரத், பினராயி விஜயன், எம்.ஏ.பேபி உள்ளிட்ட சக தோழர்கள் அவரது உடல் அருகிலேயே அமர்ந்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து செப்டம் பர் 14 சனிக்கிழமை காலை 10 மணி யளவில் அவரது இல்லத்திலி ருந்து, கடந்த சுமார் அரை நூற் றாண்டு காலமாக அவர் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட, இடைவிடாமல் இயங்கிக் கொண்டே இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அலுவலகமான ஏ.கே.ஜி.பவ னுக்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டது. ஆயிரக்கணக்கான தோழர்கள் அவருக்காக கண்ணீ ரோடு காத்திருந்தனர். செவ்வ ணக்க முழக்கங்களால் அந்தப் பகு தியே அதிர்ந்தது. ஏ.கே.ஜி. பவன் வளாகமே உணர்ச்சி அலைகளில் சிக்கியிருந்தது. சக தோழர்கள் யாரும், யாருக்கும் ஆறுதல் சொல்ல இயலவில்லை. 
நாடு முழுவதும் இருந்து ஏராள மான தோழர்கள் அன்புத் தலைவ ரின் முகத்தை இறுதியாக காண்ப தற்காக பல்லாயிரம் கிலோமீட்டர் தூரம் பயணித்து வந்திருந்தனர். 

காங்கிரஸ் மூத்தத் தலைவர் சோனியா காந்தி, தமிழ்நாடு அர சின் சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பி னர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் மற்றும் பல்வேறு கட்சிக ளின் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

மாலை 3 மணி வரை சாரை சாரையாக அரசியல் தலைவர்க ளும், இடதுசாரி தோழர்களும் வந்தவண்ணம் இருந்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ் ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.வெங்கடேசன், ஆர்.சச்சிதானந்தம் ஆகியோர் செவ்வணக்கம் செலுத்தினர்.

கட்சியின் அனைத்து மாநிலக் குழுக்கள், வர்க்க வெகுஜன இயக் கங்கள் சார்பில் உணர்ச்சிமிகு அஞ்சலி செலுத்தப்பட்டது. இறுதியாக, தோழர் சீத்தாராம் யெச்சூரியின் விருப்பப்படி அவரது உடலை மருத்துவ ஆராய்ச்சிக் காக ஒப்படைக்கும் பொருட்டு, இறுதி ஊர்வலம் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை நோக்கி புறப் பட்டது.

நாடு முழுவதும் கட்சியின் முக நூல் நேரலை வாயிலாக பல லட்சக் கணக்கான தோழர்கள் இந்தக் காட்சிகளை கண்டவாறு கண்ணீர் அஞ்சலி செலுத்த, நம் அனைவரி டமிருந்தும் விடை பெற்றார் செங் கொடியின் மகத்தான நாயகன்.