india

img

ஜம்மு காஷ்மீரில் இரு பாஜக தலைவர்கள் மீது லஞ்ச வழக்கு பதிவு

ஜம்மு காஷ்மீரில் உள்ள லே மாவட்டத்தில், பத்திரிக்கையாளர்களுக்கு இரு பாஜக தலைவர்கள் லஞ்சம் வழங்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் லே மாவட்டத்தில், கடந்த மே 2-ஆம் தேதி, பாஜக சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஹோட்டல் சிங்கே பேலஸில் நடந்தது. இதற்கு பிறகு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்த நிலையிலும், ஜம்மு காஷ்மீரின் பாஜக மாநில தலைவரான ரவீந்தர் ரைனா மற்றும் சட்டமன்ற உறுப்பினரான விக்ரம் ரந்தாவா ஆகிய இருவரும், பத்திரிக்கையாளர்களுக்கு லஞ்சம் வழங்கியதாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது.

இதை அடுத்து கடந்த செவ்வாய் அன்று, லே மாவட்ட தேர்தல் அதிகாரி அவ்னி லவாசா, இவ்விருவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றத்தை அணுகினார். இந்நிலையில் தலைமை நீதிபதி நேற்று போலீசாரை வழக்கு பதிவு செய்யும்படி உத்தரவிட்டார். இதனை அடுத்து இவ்விருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.