தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
2023-ஆம் ஆண்டின் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி, மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 தொகுதிகளுக்கு நவம்பர் 7-ஆம் தேதியிலும், மிசோரம் மாநிலத்தின் 40 தொகுதிகளில் நவம்பர் 7-ஆம் தேதியிலும், சத்தீஸ்கர் மாநிலத்தின் 90 தொகுதிகளில் நவம்பர் 7 மற்றும் 17-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாகவும், ராஜஸ்தான் மாநிலத்தின் 200 தொகுதிகளில் நவம்பர் 23-ஆம் தேதியிலும் மற்றும் தெலுங்கானா மாநிலத்தின் 119 தொகுதிகளில் நவம்பர் 30-ஆம் தேதியிலும் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.