india

img

தேசிய மருத்துவ ஆணையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர்கள் வேலை நிறுத்தம்

தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து  நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்து விட்டு தேசிய மருத்துவ ஆணையத்தை மத்திய அரசு கொண்டு வருவது குறித்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தேசிய மருத்துவ ஆணையம் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மருத்துவ சங்கம் 24 மணி நேரம் வேலை நிறுத்தப்போராட்டத்தை அறிவித்தது. இதையடுத்து நாடு முழுவதும்  இன்று காலை 6 மணி முதல் மருத்துவர்கள்  வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவசரகால சிகிச்சைகள் வழக்கம் போல் நடைபெறும் என்று இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் சுமார் 1 லட்சம் மருத்துவர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தனியார் மருத்துவர்களும் வேலை நிறுத்தத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.