india

தீக்கதிர் முக்கிய செய்திகள்

லாவோஸூக்கு புறப்பட்டார்  பிரதமர் மோடி!

21-ஆவது ஆசியான் – இந்தியா மற்றும் 19-ஆவது கிழக்கு ஆசிய உச்சி  மாநாட்டில் பங்கேற்பதற் காக பிரதமர் நரேந்திர மோடி, லாவோஸ் நாட்டின் வியண்டி யன் நகருக்குப் புறப்பட்டுச் சென்றார். முன்னதாக வெளி யிட்ட அறிக்கையில், “இந் தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் வளத்திற்கான சவால் கள் குறித்து விவாதிக்க கிழக்கு ஆசிய உச்சிமாநாடு ஒரு வாய்ப்பை வழங்கும்”  என்று பிரதமர் குறிப்பிட்டுள் ளார்.

தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட்

புதுதில்லி, அக். 10 - தமிழகத்திற்கு அக்டோ பர் 13-ஆம் தேதி வரை கன மழைக்கான வாய்ப்பிருப்ப தால் இந்திய வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுவாக, தமிழகம், புதுவை - காரைக் கால் உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும், சேலம், கிருஷ்ணகிரி, தரும புரி, திருப்பத்தூர், நாமக் கல், அரியலூர், பெரம்பலூர் கரூர், திருச்சிராப்பள்ளி மற்றும் திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் அக்டோபர் 13 வரை கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. மீனவர் கள் கடலுக்குச் செல்ல வேண் டாம் என்று ஏற்கெனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

சைபர் நிதி மோசடிகளால்  ரூ.1116 கோடி இழப்பு 

சென்னை,அக்.10- இணையவழி குற்றப்பிரி வின் பயன்பாடு மற்றும் சாதனைகளை தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு வெளி யிட்டுள்ளது.

உள்துறை அமைச்ச கத்தின் கீழ் உள்ள இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தால் உருவாக்கப்பட்ட ஊகுஊகுசுஆளு, டிஜிட்டல் வங்கி, சிரெடிட்/டெபிட் கார்டு பயன்பாடு, பணம் செலுத்துதல் ஆகியவற்றால் ஏற்படும் நிதி இணைய மோசடிகள் மற்றும் பண இழப்புகளை விரைவாகப் புகாரளிக்க உதவுகிறது. 

CFCFRMS இல் தெரி விக்கப்படும் புகார்களில் குற்ற வாளிகளின் வங்கி கணக்கு கள் தாமதமின்றி முடக்கப் படுகின்றன. இந்த வசதி பாதிக்கப்பட்டவர்கள் கஷ்டப் பட்டு சம்பாதித்த பணத்தை காப்பாற்றுகிறது. 

இந்த வசதி புதிய அல்லது நேரடி புகார்களுக்கு மிகவும் பொருத்தமானது. அதேசமயம் இது பழைய புகார்களைத் தடுக்காது. இணைய புகார் களை பதிவு செய்ய பாதிக்கப் பட்டவர்கள் யாரும் நிலை யத்திற்கு செல்ல தேவை யில்லை. எந்த நேரமும் தாமத மும் இன்றி புகார்கள் www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் அல்லது 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம். 

ஜனவரி 2024 முதல் செப்டம்பர் 2024 வரையிலான காலகட்டத்தில், சைபர் நிதி மோசடிகளால் ரூ.1116 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு அதிரடி நடவடிக்கை மூலம்  ரூ.526 கோடிகளை வெற்றிகர மாக முடக்கியுள்ளது. 

உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களால் பரிந் துரைக்கப்பட்டாலும், டெலி கிராம்  அல்லது வாட்ஸப்- இல் உள்ள தெரியாத குழுக்களில் சேர வேண்டாம்.  இணைய உல கில் யாரையும் நம்ப வேண் டாம். எச்சரிக்கையாக இருங்கள் என்று சைபர் கிரைம் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

முரசொலி செல்வம் மறைவு :  சிபிஎம் மாநில செயற்ழுழு இரங்கல்

சென்னை, அக். 10 - முரசொலி இதழின் ஆசிரியரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவருமான முரசொலி செல்வம் அவர்கள் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் என்கிற செய்தி மிகுந்த வேதனையளிப்பதாகவும், அவரது மறைவிற்கு தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில  செயற்குழு கூறியுள்ளது.

இதுதொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில், கட்சியின் மாநிலச் செய லாளர் கே. பாலகிருஷ்ணன் மேலும் கூறியிருப்பதாவது:

டாக்டர் கலைஞர் அவர்களுடன் இணைந்து பணியாற்றியதோடு சுமார் 50 ஆண்டு காலத்திற்கும் மேலாக முர சொலி பத்திரிகைக்கு பங்களிப்பு செய்தவர் முரசொலி செல்வம் அவர்கள். முரசொலி நாளிதழில் ஏராளமான அர சியல் கட்டுரைகளை தொடர்ந்து எழுதி யவர். மாநில உரிமைகள், கூட்டாட்சி தத்து வம், அரசியலமைப்பு சாசனம் ஆகிய வற்றை பாதுகாக்கவும், மதவெறி கொள்கைகளுக்கு எதிராகவும் தனது எழுத்துக்கள் மூலம் உறுதியாக போராடி யவர். துணிச்சல்மிக்க எழுத்தாளர், கட்டு ரையாளர், அதிர்ந்து பேசாத பண்பாளர். பழகுவதற்கு இனிமையானவர். அவ ரது மறைவு திராவிட முன்னேற்றக் கழ கத்திற்கும், ஜனநாயக இயக்கத்திற்கும், பத்திரிகை உலகிற்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.

அவரது மறைவால் துயருற்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர்.  முரசொலி செல்வம் அவர்களது மனைவி செல்வி மற்றும் குடும்பத்தினருக்கும், உறவினர் களுக்கும், திராவிட முன்னேற்றக் கழக அணிகளுக்கும், முரசொலி நிறு வன ஊழியர்களுக்கும் பத்திரிகையாளர் களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

மின்வாரியத்தில் 70 கேங்மேன்கள் பலியானதாக வழக்கு

மின் உற்பத்தி -பகிர்மானக்கழகம்  பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை,அக்.10- தமிழக மின்வாரியத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 70  கேங்மேன்கள்  பலியாகி உள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழக (டான்ஜெட்கோ) நிர்வாகம் பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

தமிழக மின்வாரியத்தில் பல்வேறு  தொழில்நுட்ப பணிகளுக்கு திறன் சாராத கேங்மேன்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 70 கேங்மேன் கள் மின் விபத்து ஏற்பட்டு மரணமடைந்துள் ளனர். 100-க்கும் மேற்பட்டோர் மின்  விபத்துகளால் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். சமீபத்தில் நெல்லை மாவட்டத்திலும் கூட ஒரு கேங்மேன் பரி தாபமாக இறந்துள்ளார்.கேங்மேன்களை இதுபோன்ற பணிகளுக்கு பயன் படுத்தக்கூடாது என சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டும், அந்த உத்தர வை மின்வாரிய அதிகாரிகள் மதித்து நடப்பதில்லை. எனவே முறையான பயிற்சியும், போதிய தொழில்நுட்ப திறனும்  இல்லாத பணியாளர்களை தொழில்நுட்ப பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது என டான்ஜெட்கோவுக்கு உத்தரவிடக்கோரி சென்னை சிறுசேரியைச் சேர்ந்த  டி. வெண்ணிலா என்பவர் உயர் நீதிமன்றத் தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கின் மீதான விசாரணை நீதிபதிகள் பி.பி. பாலாஜி மற்றும் ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது.  அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எம் வேல்முருகன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் இரு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.