நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 31-ஆம் தேதியன்று குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்குகிறது.
மாநிலங்களவை செய்திக்குறிப்பின் படி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 31-ஆம் தேதியன்று காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்குகிறது.
குடியரசுத்தலைவர் உரைக்கு அரை மணி நேரத்திற்குப் பிறகு மாநிலங்களவை நடவடிக்கைகள் தனியே தொடரும். 2025-26ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். குடியரசுத்தலைவர் உரை மீது பிப். 3, 4, 5 ஆகிய தேதிகளில் விவாதம் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 13 ஆம் தேதி நிறைவடையும். இரண்டாம் அமர்வு மார்ச் 10 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.