பாஜக ஆளும் அசாம் மாநிலத் தில் உள்ளது கர்பி ஆங்லாங் மாவட்டம். இந்திய அர சியலமைப்பின் 6ஆவது அட்ட வணை விதிகளின் படி கர்பி ஆங்லாங் தன்னாட்சி கவுன்சி லால் (KAAC) நிர்வ கிக்கப்படும் ஒரு தன்னாட்சி மாவட்ட மாகும்.
இந்நிலையில், இந்த கர்பி ஆங்லாங் மாவட்டத்தில் வாழும் மணிப்பூரைச் சேர்ந்த குக்கி பழங்குடியின மக்களை வெளியேற்ற அம்மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அசாம் பாஜக அரசின் உத்தரவு காரணமாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குக்கி பழங்குடியின மக்களை வெளியேற்றும் முடிவிற்கு கர்பி ஆங்லாங் மாவட்ட மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மணிப்பூர் பாஜக அரசு அடாவடி
கர்பி ஆங்லாங் மாவட்டத்தில் இருந்து வெளியேற்றப்படும் குக்கி பழங்குடியின மக்கள் மணிப்பூரில் வசித்தவர்கள் அல்லது மணிப்பூரின் மூதாதையர்களாக இருந்தால் மட்டுமே அவரவர் சொந்த மாநிலத்திற்குள் அனுமதிக்கப்படும் என மணிப்பூர் பாஜக முதல்வர் பைரேன் சிங் கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப் பில் அவர் மேலும் கூறுகையில்,”குக்கி பழங்குடியின மக்களை வெளியேற்று வது தொடர்பாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. மணிப்பூரில் இருந்து 1961க்கு முன் கர்பி ஆங்லாங் மாவட்டத் தில் குக்கி பழங்குடியின மக்கள் குடி யேறியிருந்தால், அவர்கள் மணிப்பூரில் உள்ள தங்களது கிராமங்களுக்கு திரும்பிச் செல்லலாம்” என கூறினார்.