india

img

பர்துவான் மண்ணில் மீண்டும் உயரும் நம்பிக்கையுடன் செங்கொடி

விவசாயப் போராட்டங்களின் போர்க்களமான பர்துவான் மண்ணில் மீண்டும் செங்கொடி உயர்த்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடு கிறது. புரட்சிக் கவிஞர் காசி நஸ்ருல் இஸ்லாம் பிறந்த இடம் மற்றும் ஹரி கிருஷ்ண கோனார், பினோய் சவுத்ரி மற்றும் சரோஜ் முகர்ஜி போன்ற புரட்சிகர இயக்கத்தின் மகத்தான தலைவர்கள் தடம் பதித்த பர்துவான் எப்போதும் இடதுசாரிகளின் கோட்டையாக இருந்து வருகிறது.

விவசாயம், கைத்தொழில், கனிம வளங்கள் அனைத்தும் கிடைக்கும் பகுதி. பரந்த நெல் வயல்களும், நிலக்கரி வயல் களும், பெரிய இரும்பு ஆலைகளும் உள்ளன. மம்தா பானர்ஜி ஆட்சிக்கு வந்த பிறகு பர்துவானின் காட்சி முற்றிலும் மாறி யது. தொழில் துறையின் எழுச்சி ஸ்தம்பித்தது. கடந்த 13 ஆண்டுகளாக இங்கு  ஒரு தொழில் கூட வரவில்லை. பெரும்பாலானவை பூட்டியே கிடக்கின்றன. பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். விவசாயத் துறையும் சரிவை நோக்கிச் சென்றது. மாநிலத்தில் அதிக விவ சாயிகள் தற்கொலை நடக்கும் இடமும்இதுதான்.

மூன்று மக்களவைத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. அசன்சோல், பர்துவான்–-துர்காபூர், பர்துவான் கிழக்கு ஆகிய மூன்று தொகுதிகளிலும் இடது முன்னணி சார்பில் மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது. அசன் சோலில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜஹானாரா கான், பர்துவான்-துர்காப்பூரில் டாக்டர்.சுக்ரிதி கோஷல் மற்றும் பர்துவான் கிழக்கில் நீரப் கான் ஆகியோர் வேட்பாளர்களாக, சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். இடது முன்னணிக்காக வலுவான பிரச்சாரம் நடந்து வருகிறது. கடந்த முறை பாஜக அசன் சோலிலும் மற்ற இரண்டு இடங்களில் திரிணாமுல்லும் வெற்றி பெற்றன. இங்கு மூன்றாம் கட்டத் தேர்தலில் திங்களன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.