மும்பை:
பீமா கோரேகான் வன்முறை தொடர்பானஎல்கர் பரிஷத் வழக்கில் தேசிய புலனாய்வுமுகமை (NIA) சிறப்பு நீதிமன்றத்தில் வரைவு குற்றச்சாட்டுகளைச் சமர்ப்பித்துள்ளது. மகாராஷ்டிராவின் பீமா கோரேகான் என்றஇடத்தில் 1818-ஆம் ஆண்டு நடைபெற்ற சண்டையில், 25 ஆயிரம் பேர்களைக் கொண்டவலிமையான பேஷ்வா இராணுவத்தை, 500 மஹர் (தலித்) வீரர்களைக் கொண்ட பிரிட்டிஷ் படைகள் தோற்கடித்தன. இந்த வெற்றியை தலித் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், 2018 ஜனவரி 1 அன்று நடைபெற்ற கொண்டாட்டத்தின்போது, சாதிஆதிக்க வெறியர்கள் தலித் மக்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டனர். இதில் 28 வயது இளைஞர் கொல்லப்பட்டதுடன், 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதனிடையே, பீமா கோரேகான் சம்பவத்திற்கு, 2017 டிசம்பர் 31 அன்று நடைபெற்றஎல்கர் பரிஷத் கருத்தரங்கில் வெளிப்பட்டவன்முறையைத் தூண்டும் பேச்சுக்களேகாரணம் என்று கூறி, இடதுசாரி சிந்தனையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்களை பாஜக - சிவசேனா கூட்டணி அரசு கைது செய்தது. மகாராஷ்டிராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டநிலையில், புதிதாக அமைந்த சிவசேனா - காங்கிரஸ்- தேசியவாத காங்கிரசு இவ்வழக்கை திரும்பப் பெறக்கூடும் என்ற நிலையில், ஒன்றிய பாஜக அரசானது, மாநிலஅரசின் ஒப்புதல் இல்லாமலேயே எல்கர் பரிஷத் வழக்கை தேசிய புலனாய்வு முகமையின்(NIA) விசாரணைக்கு மாற்றிக் கொண்டது. இந்நிலையில்தான், என்ஐஏ அமைப்பு, இவ்வழக்கில் 10 ஆயிரம் பக்கங்களைக் கொண்ட வரைவு குற்றச்சாட்டுக்களை சிறப்புநீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதிதாக்கல் செய்துள்ளது.இதில், ஜோதி ரகோபா ஜக்தப், சாகர்தத்யாரம் கார்கே, ரமேஷ் முரளிதர் கெய்சோர்,சுதிர் தவாலே, சுரேந்திர காட்லிங், மகேஷ் ரவுத்,ஷோமா சென், ரோனா வில்சன், அருண் பெரைரா,சுதா பரத்வாஜ், வரவர ராவ், வெர்னான் கோன்சால்வ்ஸ், ஆனந்த் டெல்டும்டே, கவுதம் நவ்லகா உள்ளிட்ட 15 பேர் மீது 121(நாட்டுக்கு எதிராக போர் நடத்துதல்), 121-A(குற்றவியல் சக்தியின் மூலம் அரசாங்கத்தைமீறுதல்), 124-A (தேசத்துரோகம்), 153-A (இரண்டு சமூகங்களுக்கு இடையே வெறுப்புமற்றும் பகைமையை ஊக்குவித்தல்), 120B ( சதி), 505 (1) (பி) (நல்லிணக்கத்திற்கு பாதகமாக செயல்படுதல்) மற்றும் யுஏபிஏ சட்டத்தின்பிரிவுகள் 10, 13, 16, 18, 18-B, 20, 38, 39, 40ஆகிய 17 பிரிவுகளில் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.
“பீமா கோரேகான் வன்முறையின் பின்னணியில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தடைசெய்யப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்ட்) மற்றும் அதன் முன்னணி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். இவர்களின் முக்கிய நோக்கம் “ஜன்தனா சர்கார்” அதாவது “மக்கள்அரசாங்கத்தை” புரட்சியின் மூலம் ஏற்படுத்துவது ஆகும். இதற்காக ஆயுதங்கள், வெடிபொருட்களை பயன்படுத்தி சட்டத்திற்கு புறம்பான செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆயுதங்களுக்காகரூ. 8 கோடியை திரட்டவும் சதி செய்தார்கள். இவர்கள் இந்திய அரசு மற்றும் மகாராஷ்டிரா மாநில அரசுக்கு எதிராக இவர்கள்போர் தொடுத்துள்ளனர். மாநிலம் முழுவதும் உள்ள தலித் மற்றும் பிற வகுப்பினரின் வகுப்புவாத உணர்வை கிளப்புவதும், சாதியின் பெயரால் அவர்களை தூண்டிவிடுவதுமாக உள்ளனர். இந்த சதித் திட்டத்தின் பேரிலேயே, மாவோயிஸ்டின் முன்னணி அமைப்பான ‘கபீர் கலா மன்ச்’ எல்கர் பரிஷத் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. அதில், வன்முறையைதூண்டும் விதமான பாடல்கள், சிறு நாடகங்கள்நடத்தப்பட்டன. நக்சல் புத்தகங்களை வழங்கியுள்ளனர். இந்த நிகழ்வுகளுக்கு பின்னணியாக குற்றம் சாட்டப்பட்ட 15 பேரும் இருந்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட இந்த நபர்கள் பல்வேறு பல்கலைக்கழகங்களில் இருந்து மாணவர்களை மூளைச்சலவை செய்து தங்கள் பக்கம் இழுத்து வருவதற்கு முயற்சி செய்துள்ளனர். நேரு பல்கலைக்கழகம், டாடா சமூக அறிவியல் இன்ஸ்ட்டிடியூட் உள்ளிட்டவற்றில் பயிலும் மாணவர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டுள்ளனர்” என்று என்ஐஏ குற்றச் சாட்டுக்களை அடுக்கியுள்ளது.