மும்பையில், ஆர்டர் செய்த ஐஸ்கிரீமில் மனித விரல் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகராஷ்டிரா மாநிலம், மும்பையில் மருத்துவராக பணியாற்றி வருபவர் பிரெண்டன் செர்ராவ்(27). இவர், ஆன்லைன் ஆர்டர் மூலம் ஐஸ்கிரீம் ஒன்றை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். அப்போது, ஐஸ்கிரீமுக்குள் மனித விரல் கிடந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவர், மலாட் பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் ஐஸ்கிரீம் வந்த கடைக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், ஐஸ்கிரீமில் கண்டெடுக்கப்பட்ட மனித விரலை தடயறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் ஐஸ்கிரீம் தயாரிக்கப்பட்டு பேக் செய்யப்பட்ட இடத்தை போலீசார் சோதனை செய்து வருகின்றனர். ஐஸ்கிரீமிற்குள் மனித விரல் கிடந்த சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.