பெங்களூரு:
கொரோனா கொள்ளைக்கு இடையிலும், கர்நாடக பாஜக அரசு மின்கட்டணத்தை உயர்த்தி மக்களை வஞ்சித் துள்ளது.கொரோனா ஊடரடங்கு காரணமாக,மக்கள் வேலை மற்றும் வருவாய் இழப் புக்கு உள்ளாகி, அன்றாடச் செலவுக்கே தவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், மின்கட்டணமும் உயர்த்தப் பட்டு இருப்பது, கர்நாடக மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
ஐந்து மின் விநியோக நிறுவனங்கள், தங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாகவும் 1 யூனிட்டுக்கு 83 பைசா முதல் 168 பைசா வரை உயர்த்திக் கொள்ள அனுமதி வேண்டும் என்றும் கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்திருந்தன.இதனை பரிசீலித்த ஆணையம் தற்போது மாநிலம் முழுதும், யூனிட்டு 30 காசுகள் உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.இதன்காரணமாக, கர்நாடகத்தல் சராசரியாக ஒரு யூனிட் மின் கட்டணம் 3 ரூபாய்84 காசுகளாக உயர்ந்துள்ளது. பெங்களூருவைப் பொறுத்தவரையில், வீட்டு பயன்பாட்டுக்கு முதல் 50 யூனிட் வரை ஒவ்வொரு யூனிட்டுக்கும் 4.10 ரூபாய்; 51 -100 யூனிட் வரை 5.55 ரூபாய்; 101 - 200 யூனிட்வரை 7.10 ரூபாய்; 200 யூனிட்டுக்கு மேல்8.15 ரூபாய் என கட்டணம் உயர்ந்துள்ளது.இதுவே, வணிக பயன்பாட்டுக்கு முதல்50 யூனிட் வரை, ஒவ்வொரு யூனிட்டுக்கும்8.35 ரூபாய்; 50 யூனிட்டுக்கு மேல் 9.35 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தபுதிய மின்கட்டண உயர்வு, 2020 ஏப்ரல் 1 முதலே அமலுக்கு வரும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.