புதுதில்லி:
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பணிகள் வேகமாக நடைபெற்று வந்தாலும், ஆண்களோடுஒப்பிடுகையில், பெண்களுக்குக் குறைந்த அளவே தடுப்பூசி போடப் பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதனைச் சரிசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனத் தடுப்பூசி வல்லுநர்குழு தலைவர் வி.கே. பால் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் கொரோனா 2-ஆவது அலை கணிசமாக கட்டுக்குள் வந்துள்ளது. தினசரி கொரோனாபாதிப்பும் சரி, உயிரிழப்புகளும் சரி ஆயிரத்திற்குக் கீழாக குறைந்து விட்டது. இதைப்பயன்படுத்தி அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை ஒன்றிய அரசு வேகப்படுத்த வேண்டும் என்பதே மருத்துவ வல்லுநர்களின் கோரிக்கையாக உள்ளது.ஜூன் 21 முதல் தடுப்பூசி செலுத்தும் பணி முன்பை விட சற்று அதிகரித்துள்ளது. மக்களும் தாமாகவே முன்வந்து தடுப்பூசிகளை போட்டுக் கொள்கின்றனர். ஆனால், மக்களின்தேவைக்கேற்ப தடுப்பூசி கிடைக்காதநிலையே தற்போதும் உள்ளது. நாட்டில் சராசரியாகத் தினசரி 60 லட்சம்பேருக்குத் தடுப்பூசிகள் போடப் பட்டு வருகின்றன.
இந்நிலையில்தான் தடுப்பூசி செலுத்துதலில் பாலின அசமத்துவம் நிலவுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.நாட்டில் இதுவரை 54 சதவிகிதம் ஆண்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ள நிலையில், பெண் களை எடுத்துக் கொண்டால் 46 சதவிகிதம் பேர் மட்டுமே இதுவரை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. அதாவது, ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களுக்கான தடுப்பூசிசெலுத்துதல் 8 சதவிகிதம் குறைவாகவே உள்ளது. இந்திய மக்கள் தொகையில் பெண்களைவிட ஆண்கள் 5 சதவிகிதம் என்பதை கருத்தில்கொண்டால், தடுப்பூசி செலுத்துதலில் ஆண் - பெண் இடையிலான வித்தியாசம் மிக அதிகமாகும்.
நாட்டிலேயே ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் மட்டுமே ஆண்களைவிடப் பெண்களுக்கு அதிக அளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவற்றுக்கு அடுத்ததாகசத்தீஸ்கர், இமாசல பிரதேச மாநிலத்தில் சரிசமமான எண்ணிக்கையில் தடுப்பூசிகள் செலுத்தப்பட் டுள்ளன.ஆந்திரப் பிரதேசத்தில் 46 சதவிகித ஆண்களுக்கும், 53 சதவிகித பெண்களுக்கும், கேரளத்தில் 48 சதவிகித ஆண்களுக்கும் 52 சதவிகித பெண்களுக்கும், சத்தீஸ்கரில் ஆண்கள்- பெண்கள் ஆகிய இருவருக்குமே தலா 50 சதவிகிதம், இமாசல பிரதேசத்தில் 50.1 சதவிகித ஆண்களுக்கும், 49.9 சதவிகித பெண்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள் ளது.அதேநேரம் தடுப்பூசி தொடர் பான பாலின சமத்துவத்தில் உத்தரப்பிரதேசம், தில்லி மாநிலங்கள் மிகமோசமாக உள்ளன. இங்கு 58 சதவிகிதம் ஆண்களுக்கும், 42 சதவிகிதம் பெண்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி வல்லுநர் குழு தலைவர் வி.கே. பால், இதுதொடர்பாக அளித்திருக்கும் பேட்டியில், “கொரோனா தடுப்பூசி பணிகளில் நிலவும் இந்த பாலின பாகுபாடுகள் விரைவாகச் சரி செய்யப் ட வேண்டும். எந்தெந்த மாநிலங்களில் பாலின பாகுபாடு உள்ளதுஎன்பதை ஆய்வு செய்து அதை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பெண்கள் எளிதாக தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் சூழலை உருவாக்கவேண்டும்” என்று வலியுறுத்தியுள் ளார்.