புதுதில்லி:
இந்தியாவில் மே 28 அன்று 20.70 லட்சம் கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலைக் கண்டறிந்து உரிய சிகிச்சை அளிப்பதும்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் முக்கியஆயுதங்களில் ஒன்றாக சர்வதேச நிபுணர்கள்தெரிவிக்கின்றனர். இதனால் இந்தியாவில் கொரோனா பரிசோதனைகளும் அதிகப்படுத்தப்பட்டுள் ளன. கடந்த சில நாட்களாக நாளொன்றுக்கு 20 லட்சம் மாதிரிகள் சராசரியாக பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. மே 26 அன்று இதுவரை இல்லாதவகையில் 22 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இந்தநிலையில் மே 27 அன்று இந்தியாவில்20 லட்சத்து 70 ஆயிரத்து 508- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இதுவரை33 கோடியே 90 லட்சத்து 39 ஆயிரத்து 861 கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.