தலிபான்களுக்குத் தடை விதிக்கத் தயாரா?
“ஒவைசி கட்சியினர், கர்நாடகத்தின் தலிபான்கள் போன்றவர்கள். மஜ்லிஸ் கட்சி, எஸ்டிபிஐ, தலிபான்கள் ஆகியோரின் விஷயம் எல்லாமே ஒன்றுதான்” என்று பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி. ரவி விமர் சித்திருந்தார். இந்நிலையில், “சி.டி.ரவி ஒரு குழந்தை, அவருக்கு சர்வதேச அரசியல் தெரியாது” என்று ஒவைசி பதிலடிகொடுத்துள்ளார். மேலும், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தலிபான்களுக்கு ஒன்றிய பாஜக அரசு தடை விதிக்குமா? என்று கேள்வி எழுப்பியுள்ள ஒவைசி, உலகில் தலிபான்களை தடை செய்யாத 2 நாடுகள், இந்தியாவும், பாகிஸ்தானும் மட்டும்தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
****************
ராகுலுக்கு முரணாக அம்ரீந்தர் கருத்து!
புதுப்பிக்கப்பட்ட ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தை பிரதமர் மோடி திறந்துவைத் திருந்த நிலையில் “தியாகத்தின் அர்த்தம்தெரியாத ஒரே ஒருவரால் மட்டுமே ஜாலியன்வாலாபாக் தியாகிகளை அவமானப்படுத்த முடியும்’’ என காங்கிரஸ்தலைவர் ராகுல் கூறியிருந்தார். இந்நிலையில், ‘‘அங்கு என்ன மாற்றப்பட் டுள்ளது என்று தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை இது மிகவும் அழகாக இருக்கிறது’’ என்று பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் அம்ரீந்தர் சிங் கூறியுள்ளார்.
****************
ஜம்மு - காஷ்மீரில் என்சிபி ஆட்சி!
“காஷ்மீரில் பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் உறுப்பினர் களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க காஷ்மீர் துணைநிலை ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும். காஷ்மீரில் அடுத்து நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் என்சிபி கட்சி பெருவாரியான இடங்களை கைப்பற்றி ஆட்சிஅமைக்கும்” என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.
****************
ஜேடிஎஸ் எம்எல்ஏ காங்கிரசில் இணைவது உறுதி!
அடுத்த தேர்தலில் தங்களுக்கு வாய்ப்பு தருவதாக இருந்தால் மட்டுமே காங்கிரசில் இணைவேன் என்றுமைசூரு சாமுண்டீஸ் வரி தொகுதி மதச்சார் பற்ற ஜனதாதளம் எம்எல்ஏ ஜி.டி. தேவகவுடா நிபந்தனைவிதித்து உள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இதனை காங்கிரஸ் மூத்தத் தலைவர் சித்தராமையா மறுத் துள்ளார். ஜி.டி. தேவகவுடாவும், அவரது மகன் ஹரிஸ் கவுடாவும் காங்கிரசில் இணைவது உறுதி என்று அவர் தெரிவித்துள்ளார்.
****************
பிரதமர் வேட்பாளரா?நிதிஷ் குமார் சமாளிப்பு!
நிதிஷ் குமார் பிரதமர் வேட்பாளராக முன் னிறுத்தப்படலாம் என்று அவரது கட்சித் தலைவர்கள் பரபரப்பைக் கிளப்பியிருந்தனர். இந்நிலையில், ‘பிரதமா் பதவிக்குநான் ஆசைப்படவில்லை’ என்று நிதிஷ்குமார் கூறியுள்ளார். “கட்சிக் கூட்டத்தில்தொண்டர்கள் ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசுவார்கள். அவையெல்லாம், கட்சியின் அதிகாரப்பூா்வ அறிவிப்பாகி விடாது” என்று நிதிஷ் விளக்கம்அளித்துள்ளார்.