india

img

ட்ரோன்கள் பறப்பதற்கான  புதிய வழிகாட்டுதல் வெளியீடு... விதியை மீறுவோருக்கு ரூ.1 லட்சம் அபராதம்....

புதுதில்லி:
வான்வழியில் ட்ரோன்கள் பறப்பதற்கான புதிய வழிகாட்டு முறைகளை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது.விதியை மீறுவோருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.இதில், விமான நிலைய வெளிவட்டத்தில் இருந்து 45 கிலோ மீட்டர் சுற்றளவாக இருந்த ‘ சிகப்பு மண்டலம்’தற்போது 12 கிலோ மீட்டர் சுற்றளவாகக் குறைக்கப்பட்டுள்ளது.  ‘மஞ்சள் மண்டலம்’ எனும் கட்டுப்பாட்டுடன் பறக்க அனுமதிக்கப்பட்ட பகுதியாகவும், மூன்றாவதாக ‘பச்சை மண்டலம்’ எனும் அனுமதி தேவைப்படாத கட்டுப்பாடு இல்லாத பகுதி என்று மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளது.250 கிராமுக்கும் குறைவான எடை கொண்ட நேனோ ட்ரோன்களுக்கு தனிப்பட்ட குறியீட்டு எண்களோ அல்லது வனிக நோக்கில் இயக்கப்படாத மைக்ரோ ட்ரோன்களுக்கு ரிமோட் பைலட் உரிமமோ அவசியமில்லை.இதர ட்ரோன்களுக்கு தனிப்பட்ட குறியீட்டு எண் மற்றும் ஆளில்லா விமானத்தைஇயக்குவதற்கான அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.மாணவர்களுக்கான ரிமோட் பைலட் உரிமம் இரண்டுபிரிவுகளின் கீழ் 18வயது முதல் 65 வயது வரை உள்ளவர்களுக்கு வழங்கப்படுகிறது. பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாணவர்கள் பிரிவில் வழங்கப்படும்உரிமம் ஐந்தாண்டு வரை செல்லத்தக்கது. இதனை மேலும் இரண்டாண்டு நீட்டித்துக் கொள்ளலாம்.

இதர பிரிவில் உரிமம் பெறுவோருக்கு பத்தாண்டு வரை செல்லத்தக்கது.விதிமுறைகளை மீறுவோருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.ட்ரோன்களுக்கான கட்டணச் சுமையை 300 கிலோவில் இருந்து 500 கிலோவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்த முழு விவரங்களை ஒன்றிய விமான போக்குவரத்து அமைச்சக இணையதளத்தில் https://digitalsky.dgca.gov.in/ தெரிந்துகொள்ளலாம்.