india

img

விவசாயிகள் சங்க மகாராஷ்டிர மாநிலச் செயலாளருக்கு சங்கிகள் கொலை மிரட்டல்..... அகில இந்திய விவசாயிகள் சங்கம் கண்டனம்

புதுதில்லி:
மகாராஷ்டிர மாநில விவசாயிகள் சங்க செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ள சங்கிகளின் கோழைத்தன நடவடிக்கையை அகில இந்திய விவசாயிகள் சங்கம்கண்டித்துள்ளது.

இது தொடர்பாக அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

நரேந்திர மோடியின் தலைமையிலான பாஜக அரசாங்கம் கொண்டுவந்த விவசாயிகள் விரோத வேளாண்சட்டங்களுக்கு எதிராக அமைதியான வழியில் போராடி வரும்விவசாயிகளுக்கு எதிராக வன்முறையைத்தூண்டிவரும் சங் பரிவாரத்தின் முயற்சிகளுக்கு அகில இந்திய விவசாயிகள் சங்கம்கண்டனம் தெரிவித்துள்ளது.மிகவும் கொடூரமான முறையில் மகாராஷ்டிர மாநில விவசாயிகள் சங்கத் தலைவர் டாக்டர் அஜித் நவாலே அவர்களுக்கு சங்கிகள் கொலை மிரட்டல் விடுத்ததற்கும் கண்டனம் தெரிவித்துள்ளது. இவ்வாறுகொலை மிரட்டல் விடுக்கும் குண்டர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.  இத்தகைய மிரட்டல்கள் மூலமாகவோ அல்லதுகாவல்துறையினரின் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற அச்சுறுத்தல்கள் மூலமாகவோ போராடும் எந்தவொரு விவசாய சங்கத் தலைவர்களையும் மிரட்டிப் பணிய வைக்க முடியாது.

ஆளும்கட்சி குண்டர்கள் வன்முறை
சிங்கூ எல்லையில் போராடிவரும் விவசாயிகள் மீது ஆளும் கட்சி சார்பான குண்டர்கள் கும்பல் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டுள்ளதை அகில இந்திய விவசாயிகள் சங்கம் கண்டிக்கிறது. இதேபோன்று உத்தரப்பிரதேசத்திலும், ஹரியானாவிலும் காவல்துறையினரின் தூண்டுதலுடன்காசிபூர், பல்வால், ஷாஜஹான்பூர் ஆகியஇடங்களிலும் வன்முறைக் கும்பல்கள் வெறியாட்டங்களில் ஈடுபட்டுள்ளன. குடியரசு தினத்தன்று நடைபெற்ற வன்முறை செயல்களுக்கு,பாஜக அரசாங்கமும், காவல்துறையும் சமூக விரோத சக்திகளுடன் சேர்ந்துகொண்டு விவசாயிகள் போராட்டங்களை சீர்கலைத்திடசெயல்பட்டதே காரணமாகும்.

விவசாயிகள்இயக்கத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்திடஇவர்கள்மேற்கொண்ட சூழ்ச்சி நடவடிக்கைஎன்பதை மக்கள் நன்கு பார்த்தார்கள்.பாஜக அரசாங்கம், கார்ப்பரேட் ஊடகங்கள் மூலம் விஷப் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோதிலும், விவசாயிகள் இயக்கம்நாள்தோறும் அதிகரித்து வலுவடைந்துவருவதைப் பார்த்து ஆளும் வர்க்கங்கள்ஆடிப்போயிருக்கின்றன. இதனால்தான்இத்தகைய கோழைத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கியிருக்கின்றன.இத்தகைய வன்முறைக் கும்பல்கள் மற்றும் அவர்களின் எஜமானர்களின் இத்தகைய இழிசெயல்களைத்தனிமைப்படுத்திட, விவசாயிகள் நடவடிக்கைகளுக்கு ஆதரவு  அளித்திட வேண்டும் என்று அனைத்து ஜனநாயகப் பிரிவினரையும் அகில இந்தியவிவசாயிகள் சங்கம் கேட்டுக்கொள்கிறது.