புதுதில்லி:
மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, கடந்த 2020 நவம்பர் முதல் தலைநகர் தில்லிக்குச் செல்லும் சிங்கு, திக்ரி, காசிப்பூர்எல்லைகளை முற்றுகையிட்டு விவசாயிகள்போராடி வருகின்றனர். மழைக்காலத்தில் ஆரம்பித்த இப்போராட்டம், அடுத்ததாக கடும் குளிரையும்,தற்போது வெயிலையும் கடந்து நடந்து வருகிறது. இதுவரை 350 பேர் போராட்டக் களத்திலேயே தங்களின் உயிரை விட்டுள்ளனர். அப்படியும் யாரும் சொந்த ஊர் திரும்பவில்லை. குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் மட்டும் முறைவைத்து, வேளாண் சாகுபடிக்காக சொந்த ஊர் சென்று வருகின்றனர். மற்றவர்கள் களத்திலேயே உள்ளனர்.
அந்த வகையில், கடந்த மார்ச் மாத இறுதியில் சம்பா கோதுமைப் பயிர் அறுவடைக்காக குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விவசாயிகள் வீடு திரும்பினர். ஆனால்,அறுவடை முடிவிற்கு வந்ததைத் தொடர்ந்து.பஞ்சாப்பில் இருந்து சுமார் 1,500 விவசாயிகள் மீண்டும் திக்ரி எல்லைக்கு திரும்பியுள்ளனர்.இவ்வாறு வரும் விவசாயிகளிடம் கொரோனாவைக் காட்டி அச்சுறுத்தும் பணியை ஆட்சியாளர்கள் மேற்கொண் டனர். எனினும், அந்த அச்சுறுத்தல் களை விவசாயிகள்பொருட்படுத்துவதாக இல்லை. பிரதமர் மோடி கொண்டுவந்த வேளாண் சட்டங்கள், கொரோனாவைவிட கொடியவை. எனவே, வேளாண் சட் டங்களை ஒழித்துக் கட்டும் போராட்டத்தில் எங்களின் உயிரே போனாலும் பரவாயில்லை என்று விவசாயிகள் கூறியுள்ளனர்.மேலும், அறுவடைக்குச் சென்ற விவசாயிகள் மீண்டும் போராட்டக் களம் திரும்பமாட்டார்கள் என அரசு தவறாகக் கருதிவிட்டது. ஆனால் மே 2-ஆம் தேதிக்கு முன் பாக பழைய எண்ணிக்கையுடன் எங்களின் போராட்டம் தொடரும். கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளையும் நாங்கள் தவறாமல் கடைப்பிடிப்போம்’’ என்று குறிப் பிட்டுள்ளனர்.